CWC 5 Special: மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ப்ரான் ரெசிபி! இதுல இருக்க நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
CWC 5 Special: மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ப்ரான் ரெசிபி! இதுல இருக்க நன்மைகள் என்னென்ன தெரியுமா?


அந்த வகையில், கடந்த வார நிகழ்ச்சியில் பிரபல குக் மாதம்பட்டி இறால் செய்வதற்கான டாஸ்க் கொடுத்தார். இன்று அசைவ உணவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவு அசைவ உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சிக்கன், மட்டன், மீன், பிரான், நண்டு போன்றவை பெரும்பாலும் அனைவரும் சாப்பிடக்கூடிய அசைவ உணவாகக் கருதப்படுகிறது. இதில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கடல் உணவுகளில் ஒன்றாகவே இறால் அமைகிறது. இதில் இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க

இறால் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

இறால் சுவையானதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் புரதம், வைட்டமின் B6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதன் அதிகபட்ச நன்மையாக குறைந்த கொழுப்பு, அதிக புரதம் என சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகைய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது டல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

அன்றாட உணவில் இறால் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த

100 கிராம் அளவிலான இறாலில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலில் (RDI) 11% கால்சியம், பாஸ்பரஸுக்கு 33% RDI, துத்தநாகத்திற்கான சுமார் 20% RDI, செலினியத்திற்கு சுமார் 25% RDI, பொட்டாசியத்திற்கு 9% RDI, இரும்புக்கு சுமார் 15% RDI என்ற அளவில் நிறைந்துள்ளது.

மேலும் இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் பி6, பி12 மற்றும் நியாசின் போன்ற அனைத்தும் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது மெலிந்த தசையை அதிகரிப்பதுடன், இரத்த சிவப்பணுக்களை நிரப்ப உதவுகிறது.

உடல் எடையிழப்புக்கு

இறாலில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே சமயம் இதில் குறைவான அளவில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. மேலும் இந்த கடல் உணவில் நிறைந்துள்ள துத்தநாகம் நேரடியாக லெப்டினுடன் தொடர்புடையதாகும். இந்த லெப்டின் கொழுப்பு சேமிப்பு மற்றும் பசியின்மையை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். கூடுதலாக, இறாலில் நிறைந்துள்ள அதிகளவு அயோடின் சத்துக்கள், தைராய்டு ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மொத்தத்தில் இறால் உண்பது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்

தசைகள் மற்றும் எலும்பு வலுவாக

இறாலில் உள்ள செலினியம் எலும்பின் வலிமை மற்றும் உறுதியை மேம்படுத்துகிறது. இந்த செலினியம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இதன் கால்சியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பிற தாதுக்கள் எலும்புகளை வலுவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இறாலில் உள்ள புரதம் அமினோ அமிலங்களுடன் தசையை உருவாக்குவதற்கு உதவும் ஒரு முக்கியமனா கனிமமாக செயல்படுகிறது. இது தசை திசுக்களை சரி செய்ய மற்றும் பராமரிக்க உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்க

புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் காற்று மாசுபடுத்திகள்  போன்ற மூலங்களிலிருந்து நாம் ஃப்ரீ ரேடிக்கல்களைப் பெறுகிறோம். இந்த ஃப்ரீ ரேடிக்கல்களைத் தவிர்க்க செலினியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இறால்களை எடுத்துக் கொள்ளலாம். இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், கடுமையான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் செலினியம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், கட்டி வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

இறால் அதிகளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமிலங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மாரடைப்பு போன்ற அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான இதய அமைப்புக்கு பெரிதும் உதவும் ஊட்டச்சத்து ஆகும். இது சிறந்த ஆற்றல் மூலமாக செயல்படுகிறது.

இவ்வாறு இறால் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்