அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க

  • SHARE
  • FOLLOW
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க


நம் முன்னோர்கள் உணவுகளில் எந்த உணவு ஆரோக்கியமானது, எந்த உணவு ஆரோக்கியமற்றது என்பதைக் கூறியுள்ளனர். அதே சமயம், உணவு ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. அது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவும் மிக முக்கியம் என்பதையும் கூறியுள்ளனர். இதனைத் தெரிவிக்கும் விதமாக “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழியில் உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு குறித்து மறைத்து வைத்துள்ளனர்.

இந்த பதிவும் உதவலாம்: Grapes Leaves Benefits: திராட்சை இலை சாப்பிடுவதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இந்த பழமொழி பல விஷயங்களுக்குப் பொருந்தும். இது உணவு சார்ந்த விஷயங்களுக்கு முற்றிலும் பொருத்தமாக அமைகிறது. இந்த கூற்றின் படி, எந்தவொரு நல்ல செயலாக இருப்பினும், அது அளவுக்கு மீறினால் பிரச்சனையிலேயே முடியும். அதே போலவே, ஆரோக்கியமான உணவாக இருப்பினும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது நஞ்சாக மாறிவிடலாம். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளும் போதிலும், அதைக் குறைவான அளவில் உட்கொள்வதே நன்மை பயக்கும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாத உணவுப் பொருள்கள் எவை?

நாம் அன்றாடம் சாப்பிடக் கூடிய உணவுகளில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதையும், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் என்ன விளைவுகளைத் தரும் என்பதையும் காணலாம்.

உப்பு

உப்பில்லாத உணவு குப்பையிலேயே என பலரும் சொல்லியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்ணும் உணவில் சுவைக்காக உப்பு தேவைப்படும் என்றாலும், அதை தேவைக்குக் குறைவாகவே பயன்படுத்துவது நல்லது. அதன் படி, ஒரு நாளைக்கு 47 டேபிள் ஸ்பூன் அளவிற்கு உப்பை உணவில் சேர்த்து எடுத்துக் கொள்வது இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

உருளைக்கிழங்கு

இன்று பெரும்பாலானோர்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் உருளைக்கிழங்கும் அடங்கும். அதிலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக அமைவது எண்ணெயில் பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு (பிரெஞ்சு ப்ரைஸ்) ஆகும். குறிப்பாக, சிறு குழந்தைகள் இந்த வகை உணவுகள் உட்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர். இதுவே, இளைஞர்கள் பலர் அதிக உடல் பருமன் கொண்டதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது இதயம் சார்ந்த பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: CWC 5 Madhampatty Special: மாதம்பட்டி ஸ்பெஷல் மிளகு தூள் சாதம் நெல்லிக்காய் பச்சடி செய்முறை!

அதிகம் தண்ணீர் அருந்துவது

தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்று தானே கூறுவார்கள். ஆனால், இதில் என்ன பாதிப்பு வரப் போகிறது என்று தானே கேட்கிறீர்கள். ஆம். தண்ணீர் குடிப்பதிலும் அளவு உள்ளது. அதாவது, நாம் மிகக் குறைவான அளவில் தண்ணீர் அருந்துவதிலும் சரி, அதிகளவில் தண்ணீர் அருந்துவதிலும் சரி அது உடலுக்குப் பாதிப்பையே தருகிறது. அதன் படி, ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 4 அல்லது 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆனால் தண்ணீரின் அளவு 6 லிட்டர் மேல் தாண்டினால் அது உடலுக்குப் பாதிப்பைத் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை சர்க்கரை

இனிப்பு பிடிக்காதவர் எவர் உள்ளனர்? சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே இனிப்புக்கு அடிமையாகி பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இனிப்பானதாக இருப்பினும், இதை அதிகளவு எடுத்துக் கொள்வது பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்றாக வெள்ளை சர்க்கரை உட்கொள்ளல் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதயத்துடிப்பை நிறுத்தி விடும் அபாயத்தை உண்டாக்கலாம்.

காபி

இன்று பலரும் காலை நேரத்தில் காபி இல்லாமல் நாளைக் கடக்க மாட்டார்கள். காலையில் காஃபி உட்கொள்வது சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், மூளைக்கு புத்துணர்ச்சி தரும் என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் இது தவறான ஒன்றாகும். ஏனெனில் அதிகளவு காபி உட்கொள்ளல் இதயத்தின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் இது இதயத்துடிப்பு அபாயத்தை நிறுத்தி விடும் அபாயத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வகை உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே எந்த ஆரோக்கியமான உணவாக இருப்பினும், அதன் சரியான அளவு தெரிந்து எடுத்துக் கொள்வதே சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Chewing Food: நொறுங்கத் தின்றால் நூறு வயது.! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌…

Image Source: Freepik

Read Next

Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்

Disclaimer