
$
Pepper powder rice Recipe: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, குக் வித் கோமாளி 5 வது சீசன் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம்.
ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. அந்த வகையில் பிரபல குக் மாதம்பட்டி ரங்கராஜன் அவர்களின் ஸ்பெஷல் பழையகோட்டை மிளகு பொடி சாதம் நெல்லிக்காய் பச்சடி செய்முறை செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kambu Dosai: அருமையான காலை உணவு… கம்பு தோசையை இப்படி செய்யுங்கள்.!
பழையகோட்டை மிளகு பொடி சாதம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்.
கடுகு - 1 ஸ்பூன்.
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்.
மிளகு - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி விதைகள் - 1.1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5.
அரிசி - 1 டீஸ்பூன்.
பாலாடை - 2 ஸ்பூன்.
உப்பு - சிறிது.
செய்முறை :
- இதற்கு முதலில் ஒரு லிட்டர் பாலை சுண்ட காய்ச்சி தனியே எடுத்து வைக்கவும். பால் சூடு ஆறியதும் மேல படிந்துள்ள பாலாடையை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- இப்போது, பிரஷர் குக்கரில் 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வேக வைக்கவும்.
- பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எடுத்து வைத்துள்ள மசாலாக்களை எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போடு நன்கு அரைக்கவும்.
- முறையாக அரைத்த மசாலா பொடியை தனியே எடுத்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Ulunthu Soru Recipe: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு.! எப்படி செய்யணும் தெரியுமா.?
- இப்போது 1 கப் சமைத்த அரிசியில் 4 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் பாலாடை, 4-5 டீஸ்பூன் தயார் செய்த மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கினால் பழையகோட்டை மிளகு பொடி சாதம் தயார்.
நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
முழு நெல்லிக்காய் - 6-7.
தயிர் - 2 கப்.
தேங்காய் துருவல் - 1/4 கப்.
கொத்தமல்லி இலை - 1/4 டீஸ்பூன்.
மிளகு - 1/4 டீஸ்பூன்.
பூண்டு - 10.
சின்ன வெங்காயம் - 10.
இஞ்சி - 1 இன்ச்.
சீரகம் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
- நெல்லிக்காய் பச்சடி செய்ய முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் 6-7 நெல்லிக்காய் சேர்த்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
- பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் 5 வேகவைத்த நெல்லிக்காயை சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
- இதையடுத்து, மிக்சியில் 1/4 கப் தேங்காய் துருவல், 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி, 1/4 டீஸ்பூன் மிளகு, 10 பூண்டு, 10 சின்ன வெங்காயம், 1 இன்ச் இஞ்சி, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயார் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : இன்று ஞாயிற்று கிழமை… இவறு இல்லாம எப்படி.?
- இதை தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, பின்னர் கிரைண்டர் ஆம்லா பேஸ்ட், 2 கப் தயிர், நறுக்கிய நெல்லிக்காய் 1/4 கப், உப்பு சேர்த்து நன்கு கலக்கினால் நெல்லிக்காய் பச்சடி தயார்.
பழையகோட்டை மிளகு பொடி சாதம் ஆரோக்கிய நன்மைகள்

வெந்தயம்: இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல உடல் பிரச்சினைகளை நீக்க உதவும். வெந்தயம் உடல் சூட்டை கட்டுப்படுத்தக்கூடியது.
உளுத்தம் பருப்பு: இது செரிமானத்தை எளிமையாக்கும் தன்மை உடையது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மிளகு: கருப்பு மிளகு கொலஸ்ட்ரால் அளவு, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முழு நெல்லிக்காய்: நெல்லிக்காய் வைட்டமின் C-யின் சிறந்த மூலம். 100 கிராம் முழு நெல்லிக்காயில் (அரை கப்) 300mg வைட்டமின் சி உள்ளது. பெரியவர்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Irfan Recipe: இர்ஃபான் செய்து அசத்திய கோழி மிளகு வறுவல் ரெசிபி.!
கொத்தமல்லி விதைகள்: கொத்தமல்லி விதையில் நார்ச்சத்து, மாங்கனீசு, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். மேலும் இது வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். கூடுதலாக, அவை சிறிய அளவு பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், கரோட்டின் மற்றும் நியாசின் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
அதே போல கொத்தமல்லி இலைகள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் பலவற்றிற்கும் உதவுகின்றன.
பாலாடை: இது புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் ஒரு சிறந்த தேர்வு. பாலாடையை நீங்கள் பல வழிகளில் சாப்பிடலாம். அதாவது, சிற்றுண்டியாகவோ, உணவாகவோ அல்லது பெரிய உணவின் ஒரு பகுதியாகவோ அனுபவிக்கலாம்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version