How to make Afghani Paneer Recipe: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், கடந்த வாரம் குக் வித் கோமாளியில் பூஜா செய்து அசத்திய ஆப்கானி பனீர் எப்படி செய்யணும் என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Veg Lollipop: உங்க குழந்தைக்கு இப்படி வெஜ் லாலிபாப் செய்து கொடுங்க.. அசந்து போய்டுவாங்க!
தேவையான பொருட்கள்:
பனீர் துண்டுகள் - 7-8 துண்டுகள்.
மிளகு - 1 ஸ்பூன்.
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது).
இஞ்சி - 1 இன்ச்.
பூண்டு - 7-8 பல்.
பச்சை மிளகாய் - 2.
கொத்தமல்லி இலை - 1/4 கப்.
தயிர் - 1 கப்.
உப்பு - தேவையான அளவு.
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்.
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்.
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்.
இலவங்கப்பட்டை - 1.
ஏலக்காய் - 1.
கிராம்பு - 2.
பிரியாணி இலை - 1.
கசூரி மேத்தி - சிறிது.
ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்.
மிளகு தூள் - 1 ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.
ஆப்கானி பனீர் செய்முறை:

- முதலில் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில், 1 தேக்கரண்டி மிளகு, 2 வெங்காயம், 1 இன்ச் இஞ்சி, 7-8 பூண்டு, 2 பச்சை மிளகாய் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.
- பின், தீயை அணைத்து 1/4 கப் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- இப்போது, வதக்கிய மசாலாவை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, 1 கப் தயிர், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : kothamalli Chutney: வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும் காரசாரமான கொத்தமல்லி சட்னி தயார்!
- இதையடுத்து அரைத்த பேஸ்டில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் சீரக தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது ஒரு கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1/4 அங்குல இலவங்கப்பட்டை, 1 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பிரியாணி இலை, அரைத்த மசாலா கலவை சேர்த்து 15-20 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்ததும் கசூரி மேத்தி, 2 டீஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து தீயை அணைக்கவும்.
- இப்பொது, ஒரு தவாவில் 6-7 பனீர் துண்டுகளில் சிறிது உப்பு, 1 தேக்கரண்டி மிளகு தூள், 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை 10 நிமிடம் அப்படியே விடவும்.
இந்த பதிவும் உதவலாம் : Drumstick: பருவமழையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்காயை இப்படி சாப்பிடுங்க!!
- இப்போது கடாயில் எண்ணெய் சேர்த்து பனீரை 1 நிமிடம் வேகவைக்கவும். (தடிமனான துண்டுகளுக்கு சமைக்கும் நேரம் அதிகரிக்கும்). இப்போது கறியில் பனீரை சேர்த்து ரொட்டியுடன் பரிமாறவும்.
பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்:

எலும்புகளை வலுவாக்கும்: கால்சியம் நிறைந்த சீஸ் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூட்டு வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது தொற்றுநோயைத் தடுக்கவும் அதிலிருந்து விரைவாக மீட்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனீரில் இவை அனைத்தும் நல்ல அளவில் இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Curry Recipe: இந்த முறை இப்படி மட்டன் கிரேவி செய்து பாருங்க… வாசனையும், சுவையும் தெருவையே தூக்கும்!
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: பனீரில் உயர்தர புரதம் உள்ளது, இது உடலின் பல முக்கிய செயல்பாடுகள் சரியாக இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க, உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும்.
எடையை நிர்வாகிக்க உதவுகிறது: சீஸ் உட்கொள்வது எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப சரியான அளவில் அதை உட்கொள்ள வேண்டும்.
தசையை கட்டமைக்க உதவுகிறது: தசைகள் வளர மற்றும் வலுப்படுத்த, போதுமான புரதம் தேவைப்படுகிறது, இது பாலாடைக்கட்டியில் ஏராளமாக உள்ளது.
Pic Courtesy: Freepik