How To Make crispy and yummy Veg Lollipop Recipe at Home: தினமும் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என பல அம்மாக்கள் தங்களின் மூளையை கசக்கி பிழிந்து யோசிப்பார்கள்.
நீங்களும் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. பன்னீரை வைத்து ஒரு சூப்பரான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி என பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதோ உங்களுக்கான செய்முறை.
இந்த பதிவும் உதவலாம் : Paneer Pakoda: வெறும் 20 நிமிடம் போதும் சுவையான பன்னீர் பிரட் பக்கோடா செய்யலாம்!
தேவையான பொருட்கள் :
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3.
கேரட் - 1 நறுக்கியது.
குடைமிளகாய் - 2 நறுக்கியது.
வெங்காயம் - 2 நறுக்கியது.
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது.
பன்னீர் - 50 கிராம் துருவியது.
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி இலை நறுக்கியது - சிறிது.
பிரட் தூள் - ½ கப்.
மிளகு தூள் - 4 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
பூண்டு - 1 ஸ்பூன். நறுக்கியது
இஞ்சி - 1 ஸ்பூன். நறுக்கியது
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
சோயா சாஸ் - 1 ஸ்பூன்.
டொமட்டோ கெட்சப் - 3 ஸ்பூன்.
வினிகர் - 1 ஸ்பூன்.
சோளமாவு - கால் கப்.
பனீர் வெஜ் லாலிபாப் செய்முறை :

- முதலில், எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி நன்கு மசித்து எடுத்து வைக்கவும்.
- பின்பு அதில் நறுக்கிய கேரட், குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் துருவிய பன்னீர் சேர்க்கவும்.
- பிறகு மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து பின்பு அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அடுத்து மசாலாவை நீள் வட்ட வடிவில் உருட்டி அதில் ஐஸ் குச்சி அல்லது வேகவைக்காத உருளைகிழங்கை நீள வாக்கில் வெட்டி அதில் குத்தி வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : kothamalli Chutney: வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும் காரசாரமான கொத்தமல்லி சட்னி தயார்!
- இப்போது, சோள மாவு கலவை செய்ய, சோளமாவு, மைதா, உப்பு, மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு லாலிபாப்பை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் உருட்டி தனியாக எடுத்துவைக்கவும்.
- இதையடுத்து, சாஸ் செய்ய முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு சில்லி சாஸ், சோயா சாஸ், டொமட்டோ கெட்சப், வினிகர், தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பிறகு சோளமாவு கலவையை ஊற்றி கலந்து பின்பு மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
- அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் லாலிபாப்பை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வெஜ் லாலிபாப் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : Amla Rasam: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முழு நெல்லிக்காய் ரசம்… எப்படி செய்யணும் தெரியுமா?
பச்சைக் காய்கறி சாப்பிடுவதன் நன்மைகள்:

இரத்த பற்றாக்குறையை சரி செய்யும்
பச்சைக் காய்கறிகளில் நல்ல அளவு இரும்புச்சத்து இருப்பதால், உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. இவை இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே, குழந்தைகளுக்கு பச்சைக் காய்கறிகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
வயிற்றுக்கு நன்மை பயக்கும்
பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறு குழந்தைகளின் செரிமானம் பலவீனமாக உள்ளது. அதனால் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் அதிகம். இந்நிலையில், குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகளை ஊட்டுவது குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பச்சை இலைக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது தவிர, வைட்டமின் ஏ, பி, சி உடன் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் குழந்தை சளி, இருமல் மற்றும் பிற வைரஸ் தொற்றுகளுக்கு இரையாகாது.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Keema Samosa: மட்டன் வைத்து ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக் ரெசிபி.. இதோ செய்முறை!
கண்களுக்கு நன்மை பயக்கும்
வைட்டமின் ஏ பச்சை காய்கறிகளில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரின் கண்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானது. யுனிசெஃப் கருத்துப்படி, குழந்தைகளின் குருட்டுத்தன்மைக்கு வைட்டமின் ஏ குறைபாடு முக்கிய காரணமாகும். பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும்.
எலும்புகளை பலப்படுத்தும்
பச்சை காய்கறிகளில் நல்ல அளவு கால்சியம் உள்ளது, இது குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. இது குழந்தையின் உடல் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
Pic Courtesy: Freepik