$
How to make Coriander Leaves Chutney in Tamil: பெரும்பாலும் பல வீடுகளில் இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் காலை உணவாக இருக்கும். பெரும்பாலும் நாம் இட்லி தோசைக்கு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் வைத்து நம்மில் பலருக்கும் சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடுபவர்களுக்கும் சரி… ஒரே சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இட்லி, தோசைக்கு புதிதாக ஏதாவது சட்னி செய்ய யோசிப்பவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான பதிவு.
ஏனென்றால், இந்த முறை கொத்தமல்லி இலை வைத்து சட்னி செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். கொத்தமல்லி செய்து எப்படி செய்வது என இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் இந்த சட்னி. இது கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Kadapa Cabbage Poriyal: இந்த முறை முட்டைகோஸை இப்படி செய்து கொடுங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு.
வெங்காயம் - 2.
தக்காளி - 1.
மிளகாய் - 5.
தேங்காய் - 1/2 கப் (துருவியது).
உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்.
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்.
பூண்டு - 2 பற்கள்.
இஞ்சி - 1 துண்டு.
புளி - சுண்டைக்காய் அளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
கொத்தமல்லி சட்னி செய்முறை:
- ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்ய முதலில், கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- இதையடுத்து, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
- இப்போது, ஒரு கடாயை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வதக்கவும்.
- இவை மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லி இலையினை போட்டு வதக்குங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Ragi Roti Recipe: ராகி ரொட்டி இனிமேல் இப்படி செய்து பாருங்க…
- அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு வதக்கவும்.
- பின்னர், துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.
கொத்தமல்லி இலை சாப்பிடுவதன் நன்மைகள்
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது
கொத்தமல்லி இலைகள் சரியான செரிமானத்தை பராமரிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், உள்ள பண்புகள் வாயு, வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
எடை குறைக்க
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் கொத்தமல்லி விதைகளை பயன்படுத்தலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும், அது நன்றாக கொதித்ததும், அதை மந்தமாக வைக்கவும். வடிகட்டிய பின் அதை குடிக்கலாம், இந்த பானம் உடல் எடையை குறைக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Keema Samosa: மட்டன் வைத்து ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக் ரெசிபி.. இதோ செய்முறை!
உயர் இரத்த அழுத்தத்திற்கு நல்லது
கொத்தமல்லி இலையில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது சாதாரண உயர் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
தைராய்டு பிரச்சனை குறையும்
தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பச்சை கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. தைராய்டு பிரச்சனை இருந்தால், கொத்தமல்லி ஸ்மூத்தி அல்லது தண்ணீர் சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Chettinad Pepper Chicken: சண்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மிளகு சிக்கன் செய்முறை!
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது
இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் கொத்தமல்லி தண்ணீர் பருகலாம்.
Pic Courtesy: Freepik