$
How to make Kadapa Cabbage Poriyal: முட்டைகோஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் பெரும்பாலும் முட்டைகோஸை பொரியல் அல்லது அவியல் மட்டுமே செய்திருப்போம். ஒவ்வொருவரும் முட்டைகோஸை ஒவ்வொரு சுவையில் செய்வார்கள். ஏனென்றால், ஒவ்வொருவரின் சமையல் முறையும் வெவ்வேறுவிதமானது.
எப்போதும் ஒரே மாதிரியாக முட்டைகோஸ் பொரியல் செய்து சலித்துவிட்டதா? இந்த முறை இந்த ஸ்பெஷல் மசாலா வைத்து முட்டைகோஸ் பொரியல் செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் கடப்பா கோஸ் பொரியல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Chicken Salad Recipe: சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் சிக்கன் சாலட் எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது).
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
கடலை பருப்பு - 1 ஸ்பூன்.
உளுந்து - 1 ஸ்பூன்.
கடுகு - ¼ ஸ்பூன்.
சீரகம் - ¼ ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2 (கீறியது).
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
மஞ்சள் தூள் - ¼ கால் ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.
காய்ந்த மிளகாய் - 4.
பொட்டுக்கடலை - 1 கப்.
பூண்டு - 6 பல்.
சோம்பு - ½ ஸ்பூன்.
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்.
செய்முறை:

- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடலை பருப்பு, உளுந்து, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- அனைத்தும் பொரிந்தவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின்னர், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : குக் வித் கோமாளி சுஜிதா இளநீர் கொத்து கறி மற்றும் தேங்காய் பால் சாதம் ரெசிபி
- பின்னர் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- இந்த மசாலாவை முட்டைகோஸில் சேர்த்து நன்கு கிளறவும். அனைத்தும் பச்சை வாசம் போகும் வரை நன்கு வேகவிடவும்.
- வெந்தவுடன் சிறிது மல்லித்தழை தூவி இறக்கினால் கடப்பா முட்டைகோஸ் பொரியல் தயார்.
முட்டைகோஸ் சாப்பிடுவதன் நன்மைகள்:

கண்பார்வை
பீட்டா கரோட்டின் மற்றும் பிற வைட்டமின்கள் முட்டைக்கோஸில் ஏராளமாக காணப்படுகின்றன. இது பார்வையை மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து உட்கொண்டால், கண்புரை அபாயத்தைக் குறைக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வைட்டமின் சி முட்டைக்கோஸில் போதுமான அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நீங்கள் விரும்பினால், உங்கள் தினசரி உணவில் முட்டைக்கோஸ் சாற்றை உட்கொள்ளலாம். இது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Paneer Pakoda: வெறும் 20 நிமிடம் போதும் சுவையான பன்னீர் பிரட் பக்கோடா செய்யலாம்!
உடல் எடையை குறைக்க உதவும்
முட்டைக்கோஸில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன. இது எடையைக் குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் பசி குறைகிறது. இதன் காரணமாக, நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் மற்றும் எடையைக் குறைக்கலாம்.
தோலுக்கு நல்லது

முட்டைக்கோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்திற்கு உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகத்தில் பொலிவு ஏற்படுவதோடு பருக்களும் மறைந்துவிடும்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்
முட்டைக்கோஸில் அதிக நார்ச்சத்து இருப்பதால், செரிமான சக்தியை வலுப்படுத்துவதில் நன்மை பயக்கும். இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : Irfan Meen Kulambu Recipe: இர்ஃபான் ஸ்டைல் மீன் குழம்பு ரெசிபி
தசைகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள்
லாக்டிக் அமிலம் முட்டைக்கோஸில் ஏராளமாக உள்ளது. இது தசைகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆரோக்கியமான தசைகளுக்கு, உங்கள் தினசரி உணவில் முட்டைக்கோஸை குறைந்த அளவில் சேர்க்கலாம்.
Pic Courtesy: Freepik