Kumbakonam Kadappa Recipe in Tamil: பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் இருக்கும். நாம் இட்லி தோசைக்கு பெரும்பாலும் வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் செய்து நம்மில் பலருக்கு சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடும் குழந்தைகளுக்கும் சரி… தினமும் சட்னி சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இட்லி, தோசைக்கு ஏற்ற ஏதாவது புதிய ரெசிபி செய்ய யோசிப்பவராக நீங்க இருந்தால், இது உங்களுக்கான பதிவு.
ஏனென்றால், இந்த முறை அட்டகாசமான சுவையில் கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் நாங்கள் கூறுகிறோம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் இது. இது கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கும். வாருங்கள் கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pasi Paruppu Adai: புரோட்டீன் சத்து நிறைந்த பாசிப்பருப்பு அடை.. எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
பாசிப்பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 10
கும்பகோணம் கடப்பா செய்ய
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டைகிராம்பு - 1
ஏலக்காய் - 1
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
இந்த பதிவும் உதவலாம்: Butter Garlic Egg: வெறும் 2 முட்டை போதும்.. அட்டகாசமான பட்டர் கார்லிக் முட்டை செய்யலாம்!
கும்பகோணம் கடப்பா செய்முறை:
ஒரு பிரஷர் குக்கர்ல ரெண்டு கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, ரெண்டா நறுக்கின மூணு உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி அஞ்சு விசில் வர வரைக்கும் வேக விடவும்.
குக்கர் விசில் வந்ததும் வெந்த உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸ்ர் ஜார்ல, பிரெஷ் ஆஹ் துருவிய அரை கப் தேங்காய், ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல்லு பூண்டு, ஒரு துண்டு நறுக்கின இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில், மூணு டேபிள் ஸ்பூன் என்னை ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , பொடிசா நறுக்கின வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கின ரெண்டு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: Egg Masala Toast: வெறும் 2 முட்டை இருந்தால் போதும் சுவையான முட்டை மசாலா டோஸ்ட் செய்யலாம்!
அரைச்ச மசாலா விழுது சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அஞ்சு நிமிஷம் மூடி வைத்து கொதிக்க விடவும் .
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்து வரட்டும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் கும்பகோணம் கடப்பா தயார்!.
Pic Courtesy: Freepik