Palakai poriyal Recipe in Tamil: மார்கழி மாதம் துவங்கிவிட்டது. மார்கழி மாதம் என்றாலே, இறைவனுக்கு மாலையணிந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. இப்படி விரதம் இருக்கும் 45 நாட்களும் அசைவ உணவுங்களை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். நம்மில் பலர் ஏதாவது புதிய புதிய ரெசிபிக்களை கண்டு பிடித்து சமைக்க ஆர்வமாக இருப்போம்.
ஆனால், யோசிக்க நேர இல்லாமல் எப்பவும் சமைத்த உணவுகளையே அடிக்கடி செய்து சாப்பிடுவம். தினமும் கேரட், பீன்ஸ் பொரியல் சாப்பிட்டு உங்களுக்கு சலிப்பாக இருந்தால், இந்த முறை இந்த ரெசிபியை ட்ரை செய்யுங்க. பலாக்காயை வைத்து பொரியல் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Madurai Thanni Chutney: சட்னி அரைக்க தேங்காய் இல்லையா? மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி செய்யுங்க!
தேவையான பொருட்கள்:
பலாக்காய் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்
மசாலா அரைக்க
பட்டை - 1
கிராம்பு - 4
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி விதை - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 6
தாளிக்க
எண்ணெய் - 1 ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி / பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 1
கசூரி மேத்தி - சிறிது
மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது
பலாக்காய் பொரியல் செய்முறை:
முதலில் பலாக்காயை தோல் நீக்கி, அதை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் அதைப்போட்டு, தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இதையடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், வரமல்லி, வரமிளகாய் அனைத்தையும் ட்ரையாக வறுத்துக்கொள்ள வேண்டும். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து தனியே வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Paratha: உடல் எடையை சட்டுனு குறைக்க உதவும் பூசணிக்காய் பராத்தா.. இதோ ரெசிபி!
பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
இதையடுத்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து தக்காளியைச் சேர்த்து நன்றாக மசிய வைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதங்கியவுடன், வேகவைத்துள்ள பலாப்பிஞ்சை சேர்த்து, பொடித்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
நன்றாக வதங்கியவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பலாக்காய் பொரியல் தயா!
இந்த பதிவும் உதவலாம்: Elaneer payasam: தித்திக்கும் சுவையில் ஸ்வீட் இளநீர் பாயாசம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
பலாக்காய் ஆரோக்கிய நன்மைகள்:
- பலாப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
- பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது எடையைக் குறைக்கிறது.
- பலாப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
- பலாப்பழத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
- பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
- பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.
- பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது.
- பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும்.
- பலாப்பழ விதைகளில் புரதம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
Pic Courtesy: Freepik