How To Make Amla Buttermilk: நம் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, நாம் உண்ணும் உணவுமுறையை அடிப்படையாக வைத்தே அமைகிறது. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு தேர்வுக்குப் பதிலாக சுவையை அடிப்படையாக வைத்தே உணவைத் தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக, உடல் ஆரோக்கியத்தில் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இயற்கையான உணவுகள் ஏராளம். உணவுகள் என்பது காய்கறிகள், பழங்கள், விதைகள் என உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் அனைத்துப் பொருள்களும் அடங்கும். அதன் படி, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழ வகைகள் ஏராளம் உள்ளது. அதில் ஒன்றே ஆம்லா என்றழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!
இந்திய நெல்லிக்காய் அல்லது ஆம்லா
ஆம்லா ஆனது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மோசமான உணவுமுறை காரணமாக உடலில் அதிகளவிலான கொழுப்பு தேங்கி பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். இதற்கு சிறந்த தேர்வாக இந்திய நெல்லிக்காய் அமைகிறது. இந்த ஆம்லாவை பல்வேறு வழிகளில் நம் அன்றாட உணவுமுறைகளில் சேர்கலாம். அந்த வகையில் ஆம்லா கொண்டு தயார் செய்யப்படும் பானம் உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
நெல்லிக்காய் மோர் மசாலா தயார் செய்யும் முறை
ஆம்லா மோர் தயார் செய்வது உடலின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் ஆம்லா மோர் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
தேவையானவை
- மோர் - 1 கப்
- பெரிய நெல்லிக்காய் - 10
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - சிறிய துண்டு
- புதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கா?
நெல்லிக்காய் மோர் தயாரிப்பது எப்படி?
- ஆம்லா மோர் தயார் செய்ய முதலில் நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, மோர் போன்ற அனைத்தையும் துண்டுகளாக்கப்பட்ட ஆம்லாவை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
- இதை வடிகட்டி போதிய அளவு தண்ணீர் சேர்த்தால் சுவையான நெல்லிக்காய் மோர் தயார் செய்யப்பட்டது.
- இந்த பானத்தை அடிக்கடி குடிக்கும் போது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

நெல்லிக்காயின் ஊட்டச்சத்துக்கள்
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இன்று நெல்லிக்காய் பரவலாக காணப்படும் ஒன்றாகும். எனவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காய் அதிகளவு கிடைக்கும் காலங்களில் இதை ஃபிரிட்ஜில் நீண்ட நாள்கள் வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.
இதற்கு நெல்லிக்காய்களை முழுதாக டப்பா ஒன்றில் உப்புத்தண்ணீரில் வைத்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வதன் மூலம், நெல்லிக்காய்கள் நீண்ட நாள்கள் வரை கெடாது. எனவே எளிதாக நெல்லிக்காய் மோர் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இதற்கு மாற்றாக நெல்லிச் சாறு, நெல்லி தேநீர் என செய்து அருந்தலாம். ஆம்லா முரப்பா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Salad: நெல்லிக்காய் சாலட் செய்முறையும், ஆரோக்கிய நன்மைகளும்!
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நெல்லிக்காய் மற்ற பழங்களை விட அதிகளவு வைட்டமின் சி சத்துக்களைக் கொண்டுள்ளது.
- இது நரைமுடி பிரச்சனையைத் தடுக்கிறது.
- தினமும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
- நெல்லிக்காய் சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது வாந்தி, பித்த பிரச்சனைகள், வறட்சி, அனீமியா போன்றவற்றைத் தடுக்கிறது.
- ஆம்லா சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணப்படுத்தலாம்.
- மேலும் ஆம்லா உட்கொள்வது ஆஸ்துமா, இருமல், மூச்சுக்குழாய் வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

இது போன்ற ஏராளமான நன்மைகளைத் தரும் வகையில் ஆம்லா அமைகிறது. இது உடலுக்கு இயற்கையான நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: முழு நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்!
Image Source: Freepik