Amla Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Amla Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கா?

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்

கண் பார்வை மேம்படும்

நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். குறிப்பாக கண் பார்வையை மேம்படுத்தும். 

இதையும் படிங்க: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மழை காலத்தின் போது பலர் பலவிதமான நோய்த்தொற்றுகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது தான் காரணம். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிடுங்கள். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. 

உடல் எடையை குறைக்கும்

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. மேலும் இது உடலில் மெட்டபாலிசம் அளவை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். 

ஆற்றலை மேம்படுத்தும்

நெல்லியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவுகின்றது. தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர, உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. 

நச்சுக்கள் வெளியேறும்

தினமும் காலை எழுந்த உடன், வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால், உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மேலும் நெல்லிக்காயில் உள்ள நீர்ச்சத்து அதிக சிறுநீரை உற்பத்தி செய்து, அதன் வழியே கழுவுகளை வெளியேற்றுகின்றது. 

Image Source: Freepik

Read Next

Best Cooking Oil: நீங்கள் எந்த சமையல் எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

Disclaimer

குறிச்சொற்கள்