Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!


Amla Powder Benefits: நெல்லிக்காய் உடலுக்கு பலவகையில் நன்மைப் பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நல்லது. பல நேரங்களில் நெல்லிக்காயை தேடி வாங்க முடிவதில்லை. எனவே நெல்லிக்காய் பவுடர் கடையில் விற்கும் அதை வாங்கி சாப்பிடலாம். அல்லது நீங்கள் வாங்கும் நெல்லிக்காயை பொடி செய்து வைத்துக் கொண்டும் சாப்பிடலாம். நெல்லிக்காய் பொடி சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நன்மைப்பயக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

நெல்லிக்காய் பொடியை எப்படி சாப்பிடலாம்?

பலர் நெல்லிக்காயை தவறாமல் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நெல்லிக்காயை தினமும் உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காயை ஜூஸ் ஆகவோ, பொடியாகவோ, பச்சையாகவோ சாப்பிடுகிறார்கள். அதேபோல் பலர் இதை ஊறுகாய் செய்தும், ஜாம் செய்தும் சாப்பிடலாம். நெல்லிக்காயை பொடியாக செய்து சாப்பிடுவது மிக எளிது. காரணம் நீங்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் போன்றவற்றில் நெல்லிக்காய் பொடியை தூவியும் சாப்பிடலாம். அல்லது காலையில் நெல்லிக் காய் பொடியை தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். நெல்லிக்காய் பொடி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்

நெல்லிக்காய் பொடி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

நெல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலில் நோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. ஆம்லா பவுடர் வைட்டமின் சி-ன் தூய்மையான வடிவமாகும். இது இரத்த நாளங்களை வலுவாகவும் தடிமனாகவும் ஆக்குவதன் மூலம் உங்களை வலுப்படுத்துகிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதன்மூலம் தொற்று நோய்களை எளிதாக எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும்.

இதயநோய் அபாயம் குறையும்

நெல்லிக்காய் பொடியின் சிறந்த நன்மைகள் குறித்து பார்க்கையில், இது கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பெரிதளவு போராடுகிறது. மேலும் இதயநோய் அபாயத்தையும் குறைக்கிறது. ஆம்லாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட பெரிதளவு உதவுகிறது. இது செல் பாதிப்பை குறைப்பதோடு புற்றுநோய் மற்றும் அழற்சி அபாயத்தையும் குறைக்கும்.
சருமத்திற்கான நன்மைகள்

சருமப் பிரச்சனைக்கு நல்லது

நெல்லிக்காய் பொடி நன்மைகளில் மற்றொரு பிரதான நன்மையாக சருமத்தை பளபளப்பாக மாற்ற இது பெரிதளவு உதவுகிறது. நெல்லிக்காய் பொடியை தண்ணீருடுடன் கலந்து குடிக்கலாம். அதேபோல் உங்கள் பேஸ் மாஸ்க்கில் இந்த பொடியை சேர்க்கலாம். நெல்லிக்காய் பொடி, தேன் மற்றும் தயிர் கலந்து விரைவாக முகமூடியை உருவாக்கலாம். இதை மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது

அம்லாவின் சிறந்த நன்மைகளில் ஒன்று அதிக நார்சத்து ஆகும். இது செரிமான அமைப்புக்கு அற்புதமாக வேலை செய்யும். மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்றுப் புண்ணுக்கு இது சிறந்த வீட்டு மருந்து.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

ஆம்லாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது வயிற்றில் அமில அளவைக் குறைக்கிறது. உடல் முதிர்ச்சியை குறைக்க நெல்லிக்காய் பெரிதளவு உதவுகிறது. அதேபோல் நெல்லிக்காயில் குரோமியம் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதளவு நன்மை பயக்கும். இது உடல் இன்சூலினுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இரத்த குளக்கோய் அளவையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிக்காய் பொடியை இரத்த சுத்திகரிப்பாளராகவும் செயல்படுகிறது. வெல்லத்துடன் கலந்தும் தினமும் சாப்பிடுங்கள்.

இரத்த ஹீமோகுளோபின் அளவு

இரத்த ஹீமோகுளோபின் அளவையும் இயற்கையாக அதிகரிக்க உதவுகிறது. முடிக்கு நெல்லிக்காய் மிக நல்லது. இது பொடுகை குணப்படுத்துவது மட்டுமின்றி முடி உதிர்வையும் தடுக்கும். சீகைக்காய், தயிர் மற்றும் நெல்லிக்காய் தூள் போஸ்ட் செய்யவும். இது உங்கள் உச்சந்தலையில் தடவி அரை மணிநேரம் விட்டு விடுங்கள். பின் காயந்த உடன் கழுவவும். இது மிகுந்த நன்மை பயக்கும்.

இதையும் படிங்க: க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்

இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் கூடுதலாக ஏதேனும் சிக்கலை சந்திக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Black Pepper Benefits: கருப்பு மிளகில் இவ்வளவு நன்மையா?!

Disclaimer

குறிச்சொற்கள்