Benefits Of Black Pepper: கருப்பு மிளகில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதன் காரத்தன்மை, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கிறது. இதன் மருத்துவ குணத்திற்காக, உலகம் முழுவதும் கருப்பு மிளகு உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது சிறந்து திகழ்கிறது. இதில் உள்ள எண்ணற்ற நன்மைகளில் சிலவற்றை இங்கே காண்போம்.
சர்க்கரையை குறைக்கும்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க கருப்பு மிளகு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உங்கள் உணவில் கண்டிப்பாக மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: Cashew Nuts: அளவுக்கு அதிகமா முந்திரி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுமா? உண்மை என்ன?
புற்றுநோயுடன் போராடும்
கருப்பு மிளகில் உள்ள பைபரைன், புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். குறிப்பாக மார்பக புற்றுநோயுடன் அவதிப்படுபவர்களுக்கு மிளகு ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது
கருப்பு மிளகில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உங்களை காக்க உதவுகிறது. இது இளமையில் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்

கொழுப்பை கட்டுப்படுத்த கருப்பு மிளகு சிறந்த தேர்வாக உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை கறைப்பதுடன், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன், இதய நோய் சார்ந்த அபாயம் குறைகிறது.
மூட்டு வலி நிவாரணம்
கருப்பு மிளகில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உங்களை மூட்டு வலியில் இருந்து தள்ளி வைக்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும். இதனால் மூட்டு வலியும் நீங்கும்.
Image Source: Freepik