நம் உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால், நமக்கு பல வியாதிகள் வந்து சேரும். அதாவது, செரிமான பிரச்சனை, மஞ்சள் காமாலை, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கல்லீரலின் முக்கிய வேலை, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது தான். இதனால் நாம் நம் கல்லீரலை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் அறிந்தால், உடணடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கல்லீரல் பிரச்சனைகளை உணவு பழக்கம் மூலமும் குணப்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், சீரான உணவு, சரியான உடற்பயிற்சி மூலம் நாம் நம் கல்லீரலை பத்திரமாக பார்த்துக்கொள்ள முடியும். இதற்காக நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கீரை வகைகள்
கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள், கல்லீரல் நோய் அபாயத்தை தடுக்கிறது. இதனை வழக்கமாக எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் நோயில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: Liver Healthy Foods: ஆரோக்கியமான கல்லீரலுக்கு சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்!
காளான்கள்
காளான் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குறைந்த அளவே கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாகவும், விரைவில் அதில் இருந்து விடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
பழங்கள்
ஆப்பிள், திராட்சை, அவகோடா போன்ற பழங்கள் கல்லீரல் நோய் அபாயத்தை குறைக்கும். இவை கரையக்கூடிய நார்ச்சத்தின் மூலமாக திகழ்கிறது. ஆகையால் இவை செரிமானத்தை எளிதாக்கின்றன. மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
ஆலிவ் எண்ணெய்
உங்கள் உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதன் மூலம் கல்லீரலை பாதுகாக்கலாம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள், கல்லீரல் செயல்பாட்டில் பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தும்.
மீன்
ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த சால்மன் போன்ற மீன்களை உட்கொள்வதால், கல்லீரல் வீக்கம் குறையும். மேலும் கல்லீரல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறையும்.
Image Source: Freepik