What are the side effects of sunflower oil: நம்மில் பெரும்பாலானோர் சமையலுக்கு சூரியகாந்தி எண்ணையை பயன்படுத்துவோம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றும் கருதுகின்றனர். எனவே தான், இந்தியாவிலும் சரி… வெளிநாடுகளிலும் சரி… வறுக்க, பொறிக்க, வதக்க என அனைத்து வகை சமையலுக்கும் அதை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக ஹோட்டல்களில் மட்டும் அல்ல நமது வீடுகளிலும் இந்த எண்ணெய் டீப் ஃப்ரை செய்வதற்கு பயன்படுத்துவோம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா சூரியகாந்தி எண்ணெயை டீப் ஃப்ரை செய்ய பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது. ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ராவின் கூற்றுப்படி, சூரியகாந்தி எண்ணெயை டீப் ஃப்ரை செய்ய பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Cholesterol: முருங்கைக்காய் அந்த விஷயத்துக்கு மட்டும் அல்ல, இந்த சமாச்சாரத்துக்கும் நல்லதாம்!
சூரியகாந்தி எண்ணெயை டீப் ஃப்ரைக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

சூரியகாந்தி எண்ணெயில் அதிக அளவு ஒலிக் அமிலம் உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நல்லது என்று கருதப்படுகிறது. எனவே தான், மக்கள் சூரியகாந்தி எண்ணெயில் சமைக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்த எண்ணெயை டீப் ஃப்ரைக்கு பயன்படுத்தும் போது எண்ணெய் அதிக வெப்பநிலையில் நிலையானதாக இருக்காது. இது அதிகமாக சூடாகும் போது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை ஆக்ஸிஜனேற்றுகிறது மற்றும் வெளியிடுகிறது. எனவே, இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், சில வகையான சூரியகாந்தி எண்ணெயில் அதிக அளவு ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கலவைகள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், ராப்சீட் எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களால் வெளியிடப்பட்ட COFS ஐ கணக்கிட்டது.
இந்த பதிவும் உதவலாம் : தப்பித்தவறி கூட இந்த எண்ணெயில் சமையல் செய்யாதீங்க… உயிருக்கே ஆபத்தாகலாம்!
சமையலறை வெப்பநிலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சமைப்பதன் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் சூரியகாந்தி எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட அதிக அளவு ஆல்டிஹைடுகளை வெளியிடுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய், இதய நோய், உடல் பருமன் மற்றும் அல்சைமர் போன்ற மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு ஆல்டிஹைடுகள் தான் காரணம்.
டீப் ஃப்ரைக்கு எந்த வகை எண்ணெய் நல்லது?

டீப் ஃப்ரை செய்ய 177 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். ஆனால், 7 முதல் 8 முறை டீப் ஃப்ரைக்கு பிறகு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டீப் ஃப்ரைக்கு எந்த எண்ணெய் சிறந்தது?
நெய் - டீப் ஃப்ரை செய்வதற்கு நெய்யை பயன்படுத்தலாம். ஏனெனில் இது அதிக வெப்பநிலையிலும் நிலையானதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Ragi Soup Recipe: ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடல் எடை குறைப்பு வரை எல்லா பிரச்சினைக்கும் இந்த ஒரு சூப் போதும்!
தேங்காய் எண்ணெய் - அதிக வெப்பநிலையிலும் தேங்காய் எண்ணெய் நிலையாக இருக்கும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உணவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
Pic Courtesy: Freepik