$
When should you not use extra virgin olive oil: நம்மில் பலரும் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்துவோம். ஏனென்றால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என கருதப்படுகிறது. ஆலிவ் ஆயிலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், பல நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும்.
எனவே தான் மக்கள் இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், அதன் அதிகப்படியான பயன்பாடு நமக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மைதான். மேலும், ஆலிவ் ஆயில் சமையலுக்கு ஏற்றது அல்ல என்பது தெரிந்தால் நீங்கள் இன்னும் ஆச்சர்யப்படுவீர்கள். ஆலிவ் ஆயில் சமையலுக்கு ஏன் நல்லது அல்ல? இதற்கு பின்னால் இருக்கு காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : தினமும் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை சாப்பிட்டால்… இந்த 3 பிரச்சனைகள் கிட்டகூட வராது!
அதிகப்படியான ஆலிவ் ஆயிலின் தீமைகள்

உணவியல் நிபுணர் கிரண் குக்ரேஜாவின் கூற்றுப்படி, நீங்கள் சமையலுக்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயைப் (extra virgin olive oil) பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை இப்போதே நிறுத்துங்கள். ஏனெனில், சமைக்கும் போது, சில சமயங்களில் அதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பக்கவிளைவுகளை வெளியிட ஆரம்பித்து, உடலில் வீக்கத்தை உண்டாக்கும்.
ஆலிவ் ஆயில் சமையலுக்கு ஏன் நல்லதல்ல?

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பீனால்கள் மற்றும் பாலிபினால்கள் சமைக்கும் போது வெப்பத்தில் நிலையற்றதாக மாறி, விரைவாக புகையாக மாறும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதே சமயம், அதன் புகை அளவும் குறைவாக உள்ளது. இதன் விளைவாக, அது தனது ஆரோக்கியமான சேர்மங்களை இழக்கும் மற்றும் நன்மைகளை வழங்குவதற்கு பதிலாக, இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் கலவைகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்.
இந்த பதிவும் உதவலாம் : வொர்க்அவுட்டிற்குப் பிறகு சாதம் சாப்பிடலாமா?
எனவே, ஆலிவ் ஆயிலை பொரியல், வறுவல் போன்ற சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதை சாலட் மற்றும் டோஸ்ட் செய்வதற்கு பயன்படுத்துவது நல்லது. இவை ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல. சருமத்திற்கும் நல்லது. இதை பச்சையாக தினமும் சருமத்தில் தாவி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ஆலிவ் ஆயிலின் நன்மைகள்

- கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
- மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் தரும்.
- புற்றுநோய், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும்.
- எலும்புகளை பலப்படுத்துகிறது.
- நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.
- தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Jaggery Tea: குளிர்காலத்தில் டீயில் வெல்லம் போட்டு குடித்து பாருங்க.. அவ்வளவு நல்லது.!
எந்த ஒரு பொருளையும் புதிதாக நமது உணவில் சேர்க்கும் போது மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. ஏனென்றால், ஒவ்வொருவரின் உடல் திறனும் மாறுபட்டவை.
Pic Courtesy: Freepik