தினமும் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை சாப்பிட்டால்… இந்த 3 பிரச்சனைகள் கிட்டகூட வராது!

  • SHARE
  • FOLLOW
தினமும் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை சாப்பிட்டால்… இந்த 3 பிரச்சனைகள் கிட்டகூட வராது!


சைவப்பிரியர்களுக்கு புரதச்சத்தை வாரி வழங்குவதில் கொட்டைகள் மற்றும் பருப்புவகைகள் முக்கிய இடம்பிடிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் கொண்டைக்கடலை அதிகம் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு விதமான கொண்டைக்கடலை உள்ளது. இதில் கருப்பு கொண்டைக்கடலையில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ளது.

முளைகட்டிய கொண்டைக்கடலையை சமைத்தோ அல்லது சமைக்காமலோ சாப்பிடலாம், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு கொண்டைக்கடலை சிறந்த உணவாகும். முலைக்கட்டிய கொண்டைக்கடலையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதும் நல்லது.

இது புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும பளபளப்பிற்கு:

கொண்டைக்கடலை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதிலுல்ள மக்னீசியம் சருமத்தில் ஏற்படக்கூடிய வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. இது சுருக்கங்களை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் வயதான எதிர்ப்புக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவும் விஷயங்களில் இதுவும் ஒன்று.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருங்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ImageSource:Freepik

Read Next

வொர்க்அவுட்டிற்குப் பிறகு சாதம் சாப்பிடலாமா?

Disclaimer

குறிச்சொற்கள்