Panam Kizhangu Benefits: பனங்கிழங்கு உடம்புக்கு எவ்ளோ நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Panam Kizhangu Benefits: பனங்கிழங்கு உடம்புக்கு எவ்ளோ நல்லது தெரியுமா?


Health Benefits Of Palm Sprouts: நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமான திகழும் பனங்கிழங்கு, செரிமான பிரச்னை, நீரிழிவு மேலாண்மை, இதய ஆரோக்கியம், சீரான இரத்த ஓட்டம், எடை இழப்பு மற்றும் எலும்பு வலிமை என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதன் நன்மைகளை இங்கே விரிவாக காண்போம். 

செரிமானம் மேம்படும்

பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது. 

இதய ஆரோக்கியம்

பனங்கிழங்கில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன. இது இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. 

இதையும் படிங்க: PCOS Weight Loss: இந்த பழக்கம் போதும்.. PCOS-ன் போது எடை குறைய உதவும்.!

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வைட்டமின் சி நிறைந்த பனங்கிழங்கை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது வைரஸ் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இது வெள்ளை இரதத் அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கும்

பனங்கிழங்கில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, அமினோ அமிலங்கள், புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. 

உடல் எடை குறையும்

பனங்கிழங்கலில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள். 

Image Source: Freepik

Read Next

தினமும் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை சாப்பிட்டால்… இந்த 3 பிரச்சனைகள் கிட்டகூட வராது!

Disclaimer

குறிச்சொற்கள்