$
Health Benefits Of Ridge Gourd: பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்-சி, இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் நீர்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே அவை வயிற்றில் ஏற்படும் வீக்கத்தையும், உடல் எடையையும் நன்றாகக் கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள எண்ணற்ற நன்மைகளில் சிலவற்றை இங்கே காண்போம்.
எடை குறையும்
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பீர்க்கங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவு. இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நீங்கள் பீர்க்கங்காய் சாப்பிடும் போது நீண்ட நேரம் நிறைவாக உணர்வீர்கள். இது உங்களை அடிக்கடி சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் எடை கட்டுக்குள் இருக்கும்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்றவை, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இது கண், கல்லீரல், வயிறு வீக்கம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்னைகளை தீர்க்கும்.
இதயத்தை பலமாக்குகிறது

பீர்க்கங்காய் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இதய அமைப்பை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றுகின்றன.
மலச்சிக்கலை நீக்கும்
பீர்க்கங்காயில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
சர்க்கரையை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காயை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். மேலும், பீர்க்காயில் உள்ள சத்துக்கள் தான் நம் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இதனால் சர்க்கரை நோய் பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
Image Source: Freepik