Amanakku Oil Benefits: ஆமணக்கு எண்ணெயில் இவ்வளவு நல்லது இருக்கா.?

  • SHARE
  • FOLLOW
Amanakku Oil Benefits: ஆமணக்கு எண்ணெயில் இவ்வளவு நல்லது இருக்கா.?


மலச்சிக்கல் நீங்கும்

வயிறு சார்ந்த பிரச்னைகள் நீங்க ஆமணக்கு எண்ணெய் சிறந்து திகழ்கிறது. நீங்கள் வயிறு சார்ந்த பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை நீங்குகிறது. நீங்கள் ஆமணக்கு எண்ணெயை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். 

கீழ் வாதத்திலிருந்து நிவாரணம்

ஆமணக்கு எண்ணெயில் ரிஸினோலெயிக் அமிலம், அனல்ஜெசிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற கீழ் வாத பிரச்னை உள்ளவர்கள் தினமும் விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், இதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க: Coconut Oil Benefits: முடி உதிர்கிறதா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தைமஸ் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆமணக்கு எண்ணெய் சிறந்து திகழ்கிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. குறிப்பாக இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ் நோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. 

எடை குறையும்

விளக்கெண்ணெயை உணவு அல்லது பானங்களுடன் இணைத்து உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைய அதிக வாய்ப்பு உள்ளது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். 

சளி இருமலில் இருந்து தீர்வு

நீங்கள் இருமல் மற்றும் சளி பிரச்னையால அவதிப்படுகிறீர்கள் என்றால், ஆமணக்கு எண்ணெயுடன் பூண்டு, இஞ்சி, மிளகாய் பொடி, யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெஞ்சில் தடவவும். இதில் உள்ள ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் சளியை குறைக்கும். மேலும் சளியில் இருந்து நிவாரணம் தருகிறது. 

தோல் ஆரோக்கியம்

சருமத்தில் ஏற்படும் பரு, வடு, சொறி, சிரங்கு, தழும்பு போன்ற அனைத்து தோல் சார்ந்த கோளாறுகளையும் ஆமணக்கு எண்ணெய் குணப்படுத்தும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளே இதற்கு காரணம். ஆகையால் தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் விளக்கெண்ணெய் தொடர்து இணைத்து வாருங்கள். 

முடி பராமரிப்பு 

கூந்தல் வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் சிறந்து திகழ்கிறது. ஆனால் இதனை நேரடியாக முடியில் தடவ வேண்டாம். ஆமணக்கு எண்ணெயை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற பிற எண்ணெய்களுடன் சேர்த்து சிறிது சூடுபடுத்தி, முடியில் தடவவும். இது முடி வளர்ச்சியை தூண்டவும், பொடுகு பிரச்னைகளை நீக்கவும் உதவுகிறது. 

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதன் உண்மை தன்மையை அறிய மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். 

Image Source: Freepik

Read Next

இந்த பொருட்களை யாருகூடயும் ஷார் பண்ணாதீங்க!

Disclaimer

குறிச்சொற்கள்