Hygiene Items That Are Not Meant To Be Shared: வாழ்க்கையில் பகிர்தல் வேண்டும். ஆனால் சில விஷயங்களை எப்போதும் பகிர கூடாது. அது உங்களுக்கும், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும்.
சிலர் வீட்டில் உள்ள சில சுகாதார அடிப்படையிலான பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறார்கள். இல்லையென்றால் வேறு ஒருவரின் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக விடுதில் தங்கி படிக்கும் மாணவர்கள் தங்களின் அனைத்து பொருட்களையும், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுத்தும். அப்படி நீங்கள் பகிர கூடாத பொருட்களை இங்கே காண்போம்.
கைக்குட்டை
உங்கள் கைக்குட்டைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது பாக்டீரியா பரவலுக்கு வழிவகுக்கும். வைரஸ் தொற்றுகளை எளிதில் ஏற்படுத்தும்.
துண்டு
உங்கள் துண்டை யாரிடமும் பகிர வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது. மேலும் நீங்கள் துண்டை கொண்டு துவட்டிய உடன், அதை அப்படியே போடாமல், வெயிலில் உலர விடவும். நீங்கள் பயன்படுத்திய உடன் வேறு யாரிடமும் அதை அப்படியே கொடுக்காதீர்கள். அது தொற்றுநோயை உண்டாக்கும்.
இதையும் படிங்க: Mosquito Repellent: உயிரை கொல்லும் கொசு விரட்டிகள்.!! ஏன் தெரியுமா.?
சோப்பு
தோலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சோப்புக்கு மாற்ற முனைகின்றன என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். பொது இடங்களில் வைத்துள்ள அல்லது மற்றவர்கள் பயன்படுத்தும் சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது உங்களுக்கு சருமம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பிரஷ்
பல் துலக்கும் பிரஷ் E.coli மற்றும் staph உள்ளிட்ட பாக்டீரியாக்களைக் கொண்டு செல்கிறது. ஒருவர் பயன்படுத்திய பிரஷ்-ஐ மற்றவர் பயன்படுத்தினால், பல் சிதைவு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் இது தொண்டையில் தொற்றுநோயை ஏற்படுத்தும்.
சீப்பு
பொடுகு, முடி உதிர்தல் அல்லது பேன் போன்ற முடி பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், சீப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது பிறரின் சீப்பைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். அவ்வாறு செய்வது உச்சந்தலையில் தொற்று மற்றும் சிரங்குகளை வரவழைக்கும்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சுகாதார நிபுணரை அணுகவும்.
Image Source: Freepik