Mosquito Repellent: உயிரை கொல்லும் கொசு விரட்டிகள்.!! ஏன் தெரியுமா.?

  • SHARE
  • FOLLOW
Mosquito Repellent: உயிரை கொல்லும் கொசு விரட்டிகள்.!! ஏன் தெரியுமா.?

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுவத்தி புகையால் மூச்சு திண்றல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை மாதவரத்தில் வசித்து வந்த மூன்று குழந்தைகள் கொசுவத்தி புகையால் மூச்சு திண்றல் ஏற்பட்டு உயிரிழந்தனர். எதனால் இப்படி நடக்கிறது என்று மக்கள் இடையே கேள்விகள் நிலவிவருகிறது. 

இப்போது தமிழகத்தில் ஆங்கேங்கே கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. சுற்றிலும் நீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், கொசுவத்தி, கொசு சுருள், கொசு அட்டை, கொசு லிக்யூட் போன்ற பல கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமீப காலமாக நிகழும் மரணங்கள் காரணமாக மக்கள் இதனை வாங்க பயம் கொள்கிறார்கள். 

கொசு விரட்டியால் ஏற்படும் பாதிப்புகள் (Effect Of Mosquito Repellent)

தோல் பிரச்னை

கொசு சுருளில் இருந்து ஏற்படும் புகை, நம் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். இது சருமத்தில் கட்டிகள், பருக்கள் மற்றும் தடித்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். 

ஆஸ்துமா

கொசு விடட்டியில் இருந்து வெளிவரும் புகை, சிகெரெட் புகைக்கு நிகரானது என்றும், இதனை சுவாசித்தால் நுரையீரல் சார்ந்த நோய் வரலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்துமா, மூச்சு திண்றல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது. இது உயிர் இழப்புக்கும் வழிவகுக்கலாம். 

இதையும் படிங்க: கொசு யாரை மிக விரும்பிக் கடிக்கும்? கொசு சிலரை மட்டும் கடிக்க காரணம் என்ன?

கண் பாதிப்பு

கொசுவத்தியில் இருந்து வெளியேறும் புகையானது கண் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இது கண்களில் எரிச்சல், பார்வை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். 

கொசு விரட்டி பயன்படுத்தும் முறை (How To Use Mosquito Repellent)

* கொசு விரட்டிக்கள் வாங்கும் முன் அதன் உள்ளடக்கத்தை படித்து பார்த்து வாங்கவும். 

* இதில் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என நான்கு வண்ணம் இருக்கும். 

* வண்ணங்களுக்கு ஏற்றவாறு ஆபத்துகள் மாறுபடும் என்பதால், எப்போதும் பச்சை நிறத்தை பயன்படுத்தவும். 

* கொசுவர்த்தி சுருள்களில் பைரெத்ரின் பூச்சிக்கொல்லிகள், கார்பன் பாஸ்பரஸ் போன்ற நச்சுக்கள் உள்ளன. இது விஷத்திற்கு சமம். ஆகையால் கதவுகளை மூடி இதனை பயன்படுத்தும் போது, உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதனால் நீங்கள் வீட்டில் கொசு விடட்டிகள் பயன்படுத்தும் போது கதவு, ஜன்னல் அனைத்தையும் திறந்து வைக்கவும். 

* இரவில் சிறிது நேரம் இதனை பயன்படுத்தவும். தூங்கும் முன் அணைத்து விடவும். 

* குழந்தைகள் கைகளுக்கு எட்டாத வகையில் கொசு விரட்டிகளை வைக்கவும். 

* கொசு தொல்லை அதிகமாக இருக்கும்போது மட்டும், கொசு விரட்டிகள் பயன்படுத்த வேண்டும். 

* முடிந்த அளவு இயற்கையை நாடுவது நல்லது. அதாவது, வேப்பம் இலையை காயவைத்து அதனை கொசு விரட்டிகளாக பயன்படுத்தலாம். 

Image Source: Freepik

Read Next

Blood Test: வருடாந்திர ஹெல்த் செக்கப்பில் இந்த 5 ரத்த பரிசோதனைகளை கட்டாயம் சேருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்