கொசுக்களுடன் தூக்கமில்லா இரவுகளா? இந்த செடிகளை வளர்த்தால் போதும்!

  • SHARE
  • FOLLOW
கொசுக்களுடன் தூக்கமில்லா இரவுகளா? இந்த செடிகளை வளர்த்தால் போதும்!

ஒரு குட்டி கொசு, ஆளையே சாய்க்கும். கொசுவிடம் இருந்து தப்பிக்க “All Out, Coils, Creams, Mosquito Mats" போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனா இது எதுவுமே ஒர்கவுட் ஆகாது. 

ஆனால் வீட்டுக்குள் கொசு வராமல் தடுக்க, ஒரு எளிய வழி இருக்கு, சில செடிகளை வீட்டை சுற்றி வைத்தாலே போதும். அதிலிருந்து வெளிவரும் வாசனை கொசுக்களை வீட்டுக்குள் அண்ட விடாது. இதற்காக நீங்கள் என்ன செடிகளை வாங்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

சாமந்தி செடிகள்

இந்த செடிகள் ஆண்டு முழுவதும் பூக்களை தரும். இந்த செடியின் பூக்கள் கொசுக்களை விரட்டும். எங்கும் எளிதாக வளரக்கூடிய இந்த பூ செடியை வீட்டின் வெளியிலோ அல்லது பால்கனியிலோ வளர்த்தால் கொசுக்களில் இருந்து நிவாரணம் பெறலாம். கொசுக்களை விரட்டுவது மட்டுமின்றி, பூக்களை பூஜைக்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: Mosquito Repellent: உயிரை கொல்லும் கொசு விரட்டிகள்.!! ஏன் தெரியுமா.?

துளசி செடி

இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை விரட்டும். மேலும், துளசி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவதும் நல்ல பலனைத் தரும். 

லாவெண்டர் செடி

இந்த செடி நல்ல மணம் கொண்டது. அதன் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இது அரோமாதெரபி மற்றும் மூலிகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஈக்கள், கொசுக்கள், சிலந்திகள் மற்றும் எறும்புகளை விரட்ட லாவெண்டர் செடிகள் நன்றாக வேலை செய்கின்றன. அதேபோல், கொசு கடித்தால் ஏற்படும் அரிப்புக்கு மூலிகை மருந்தாக செயல்படுகிறது. 

ரோஸ்மேரி 

இது ஒரு நறுமண தாவரமாகும். இச்செடியின் இலைகள் ஊசி போல மெல்லியதாக இருக்கும். இதன் தண்டிலிருந்து வரும் வாசனை கொசுக்களை விரட்டும். ரோஸ்மேரி செடியில் வெள்ளை, நீல பூக்கள் உள்ளன. இது எண்ணெய் வடிவத்திலும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அந்த எண்ணெயை உடலில் தேய்த்து வந்தால், கொசுக்களை எளிதில் விரட்டலாம்.

மேற்கூறிய செடிகளை வீட்டின் வெளியிலோ அல்லது பால்கனியிலோ வைத்து, கொசுக்களிடம் இருந்து விடுதலை பெறுங்கள். மேலும் இரவு நல்ல தூக்கத்தை அனுபவியுங்கள். 

Image Source: Freepik

Read Next

Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.

Disclaimer

குறிச்சொற்கள்