கச்சிதமான உடல் வடிவமைப்பை கொண்டிருக்க, யாருக்கு தான் ஆசை இல்லை. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பலருக்கும், டிரெண்டா மாறிப்போனது ‘லிக்விட் டயட்’ (Liquid Diet). இந்த டயட் முறையில், திட உணவுகளை பக்கம் தள்ளி வைத்து, திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வர். அதாவது ஜூஸ், சூப் போன்ற பானங்களை மட்டும் தான் நாள் முழுவதும் எடுத்துக்கொள்வர்.
முதலில் இது உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் ஒருவித அற்புத வழியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக இதற்குள் அடங்கிய ஆபத்துகள் பல உள்ளன என்பதைக் கூறுகிறது சமீபத்திய ஆய்வுகள். லிக்விட் டயட்டின் ஆபத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள், உடலுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பான மாற்று வழிகளை இங்கே தெரிந்துக் கொள்வோம்.
லிக்விட் டயட் என்றால் என்ன?
பழச் சாறு, காய்கறி சூப்புகள் போன்ற திரவங்களை மட்டுமே உட்கொள்ளும் உணவுத் திட்டமே லிக்விட் டயட். சிலர் மூன்று நாள், சிலர் ஒரு வாரம், சிலர் ஒரு மாதம் என்ற முறையில் இதை பின்பற்றுகின்றனர். சிலர் மருத்துவ ஆலோசனை இன்றி அதை தொடர்கின்றனர் என்பதே பெரிய ஆபத்து.
நிபுணர்களின் வலியுறுத்தல்
லிக்விட் டயட் குறித்து நிபுணர்கள் கூறுகையில், “ஒருவரின் உடல் தேவைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் தேவைப்படுகிறது. திரவ உணவுகள் இந்த தேவைகளில் பெரும்பாலானவை நிறைவேற்ற முடியாமல் போகின்றன. சில நாட்களுக்கு இது பரவாயில்லை என்றாலும், நீண்ட நாட்களுக்கு பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது” என்கின்றனர்.
லிக்விட் டயட்டின் எதிர்மறையான விளைவுகள்
ஊட்டச்சத்து குறைபாடு
திரவ உணவுகளில் நமக்கு தேவைப்படும் வைட்டமின், புரதம், நார்ச்சத்து போதிய அளவில் கிடைப்பதில்லை. இது உடலின் சக்தியை பாதிக்கிறது.
சோர்வு
உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் கிடைக்காமல் போனால், உடலுக்கு சக்தி குறைவாக இருக்கும். இதனால் தினசரி செயலில் சோர்வு ஏற்படும்.
மன அழுத்தம்
சில சமயங்களில் உணவு குறைபாட்டால் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. இது முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
செரிமானக் கோளாறு
தொடர்ச்சியாக இதனை பின்பற்றுவது, செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் இயல்பான முறை மாற்றமடைந்து, பசியின்மை ஏற்படலாம்.
மலச்சிக்கல்
நார்ச்சத்து இல்லாத உணவுகள் பெரும்பாலும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். நீண்டகாலத்துக்கு இது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மீண்டும் எடை அதிகரிக்கும் அபாயம்
Liquid Diet, தற்காலிகமாக எடை இழப்புக்கு வழிவகுக்கும். ஆனால் மீண்டும் சாதாரண உணவுக்கு திரும்பும் போது எடை மேலும் அதிகரிக்கும் அபாயம் உண்டு.
மருத்துவ ஆலோசனை
எடை குறைக்கும் நோக்கில், தினமும் காலை சிறிதளவு பழச்சாறு, பிறகு முழுமையான காய்கறி சூப், பிற்பாடு நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த சிறுதானியக் கஞ்சி போன்றவற்றுடன் உணவைக் கட்டுப்படுத்துவது சிறந்த வழி. முழுமையாக உணவைத் தவிர்ப்பது உண்மையான வழி அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பான மாற்று வழிகள்
* பகுதி-பகுதியாக உணவுகளை மாற்றுங்கள்: காலை திரவ உணவுகள், மதியம் சிறிதளவு முழுமையான உணவுகள், இரவில் காய்கறி சூப்புடன் கூடிய உணவு.
* சத்துள்ள நார்ச்சத்து உணவுகள்: சாமை, குதிரைவாலி, ராகி போன்ற சிறுதானிய உணவுகள்.
* உடற்பயிற்சி: தினமும் 30 நிமிட நடைபயிற்சி, யோகா, மெடிடேஷன் செய்யுங்கள்.
* ஆலோசனை முக்கியம்: மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடை குறைக்கும் திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
வாழ்க்கைமுறை மாற்றமே நிரந்தர தீர்வு
அதிகமாக ட்ரெண்டாக பேசப்படும் Liquid Diet உண்மையில் ஆழமான புரிதலின்றி பின்பற்றினால் ஆபத்துகளை ஏற்படுத்தும். உணவுக்கான இயற்கைத் தேவைகளை ஏற்க வேண்டும். வேகமாக எடை குறைக்க வேண்டும் என்ற ஆசையில், உடலை துன்புறுத்துவது என்பது அறிவில்லாத செயலாகும்.
குறிப்பு
அழகாக, ஆரோக்கியமாக இருக்க விரும்புவது தவறு அல்ல. ஆனால் அதற்கு உகந்த பாதுகாப்பான வழிகளைத் தேட வேண்டும். தற்காலிக ஆச்சரியங்களை வழங்கும் திட்டங்கள், நம் உடலை நீண்ட காலத்துக்கு சீரழிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு டயட்டையும் தொடரவேண்டாம்.
உங்கள் உடலை நேசியுங்கள். உணவை நேசியுங்கள். சமநிலையுடன் வாழுங்கள்.
🔗 ஆரோக்கியம் சார்ந்த மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எங்களை சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்:
📌 Facebook: https://www.facebook.com/share/1AzLkKmLba/
📌 Instagram: https://www.instagram.com/onlymyhealthtamil/
Read Next
குட்டையா இருக்கறவங்க வெயிட் லாஸ் பண்றது கஷ்டமா? ஆனா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா ஈஸியா குறைக்கலாம்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version