Doctor Verified

Toothbrush For Children: உங்க குழந்தைக்கு டூத் பிரஸ் யூஸ் பண்றாங்களா? எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Toothbrush For Children: உங்க குழந்தைக்கு டூத் பிரஸ் யூஸ் பண்றாங்களா? எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா?

ஏனெனில், சிறு குழந்தைகளின் பால் பற்கள் எளிதில் பாதிக்கப்படலாம். இது புதிதாக வளரும் பற்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. இதில் சிறு வயதிலிருந்தே வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள எந்த வகையான பல்துலக்குதலைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தாய்வழி மற்றும் குழந்தை ஆலோசகர் டாக்டர் ஆக்ரிதி சிங் அவர்கள் தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Height Increase Food List: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இந்த உணவெல்லாம் கொடுங்க

புதிதாக பிறந்த குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?

6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள டாக்டர் ஆக்ரிதி சிங் Finger Silicone பிரஷைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி, குழந்தைகளின் ஈறுகளை எந்த அசௌகரியமும் இல்லாமல் சுத்தம் செய்ய முடியும். இது குழந்தைகளின் மென்மையான ஈறுகளை சுத்தம் செய்வதுடன், வாயில் படிந்திருக்கும் பாலை அகற்றுவதற்கும் நன்மை பயக்கிறது. மேலும் இது வாயிலுள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.

சிறு குழந்தைகளுக்கு டூத் பிரஷ் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

சிறு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்வதற்கு, புதிய பற்கள் தோன்றியதிலிருந்து ஒரு நாளைக்கு இரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு டூத் பிரஷ் வாங்கும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகள் துலக்கும் போது எந்த வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது.

  • சிறு தலை கொண்ட பல் துலக்குதலைத் தேர்வு செய்யலாம். இது அவர்களின் வாயில் எளிதில் பொருந்தக் கூடியதாகவும், வாயின் அனைத்து பகுதிகளையும் அடையலாம்.
  • பல் துலக்குதலின் விளிம்புகள் வட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மென்மையான முட்கள் கொண்ட தூரிகைகளை வாங்க வேண்டும். ஏனெனில் இது வளரும் ஈறுகள் மற்றும் பற்களை எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சுத்தம் செய்ய சிறந்தவையாகும்.

குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக இருக்க, அவர்களுக்கு டூத் பிரஸ் தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் ஏதேனும் சிரமம் அல்லது பிரச்சனை ஏற்பட்டால் உடனே நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay Cavities In Children: உங்க குழந்தைக்கு பற்களில் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க இதை செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

குழந்தைகளின் ஸ்கிரீன் டைமை குறைக்க… ஈசியான வழிகள் இதோ!

Disclaimer