பல் துலக்க அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்றவங்களா நீங்க? எவ்வளவு போடணும்னு தெரிஞ்சிக்கோங்க..

How much toothpaste should i use on my toothbrush: நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு காலை எழுந்தவுடன் மற்றும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு பல் துலக்குவது நல்லது. இதையே பெரியவர்களும், மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசையைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். பல் துலக்க அதிகமாக பற்பசையைப் பயன்படுத்துவதால் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பல் துலக்க அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்றவங்களா நீங்க? எவ்வளவு போடணும்னு தெரிஞ்சிக்கோங்க..

What happens if you use too much toothpaste: வாய் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். ஏனெனில், பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியம் மோசமடைவதன் காரணமாக சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல் துலக்குவதை வழக்கமாக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக காலை, மாலை என இரு வேளைகளிலும் பல் துலக்குவது பற்களை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

குறிப்பாக, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக சாப்பிடும் உணவு பற்களுக்கு இடையில் சிக்கி, வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குவதை விரும்புபவர்கள், சரியான அளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோமோ என்ற சந்தேகம் எழுந்ததுண்டா? சரியான அளவு பற்பசையைப் பயன்படுத்துவதன் மூலம் பற்களை பளபளப்பாகவும், துர்நாற்றம் இல்லாமல் இருக்கவும் விரும்புகிறோம். ஆனால் தினமும் அதிகமாக பற்பசையைப் பயன்படுத்துவது, தெரியாமலேயே சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா!

இந்த பதிவும் உதவலாம்: Kids Toothbrushing Tips: குழந்தையின் வயதுக்கு ஏற்ப சரியாக பல் துலக்குவது எப்படி?

மவுத்வாஷ் பயன்பாடு

வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், முதலில் ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தால், பல் துலக்கிய பிறகு மவுத்வாஷைப் பயன்படுத்துவர். பல் துலக்கிய பின், மவுத்வாஷைப் பயன்படுத்துவதன் குறிப்பிட்ட நன்மைகளில் ஒன்றாக, அது துர்நாற்றத்தை நீக்கி, வாய்வழி சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

மேலும், வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கவும் உதவுகிறது. எனினும், எந்த வகையான மவுத்வாஷ் உங்களுக்கு சிறந்தது என்பதை அறிய, ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

அதிகம் பற்பசை பயன்படுத்துவது ஆபத்தானதா?

அதிகளவு பற்பசை பயன்படுத்துவதால் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது. பற்களை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படக்கூடிய பற்பசையில் சோடியம் ஃப்ளோரைடு என்ற பொருள் காணப்படுகிறது. இந்நிலையில் இதை அதிகமாக பயன்படுத்துவதால், வாய்வழி ஆரோக்கியம் மோசமடையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், பற்களில் துவாரங்கள் உருவாகலாம். மேலும், குழந்தைகளுக்கு ஃப்ளோரோசிஸ் போன்ற வாய்வழி பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக, பற்களைச் சுத்தமாக வைத்திருக்க சிறிதளவு பற்பசையைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

பற்பசையின் அளவில் கவனம்

நாம் பல் துலக்கும் போது பயன்படுத்தப்படக்கூடிய பற்பசையின் அளவு குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். டூத் பிரஸில் சிறிதளவு பற்பசையைப் பயன்படுத்தி, பற்களைச் சுத்தம் செய்வது நல்லது.

அதே சமயம், குழந்தைகளுக்கு பல் துலக்க அதிக அளவு பற்பசையைக் கொடுக்கக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு பற்பசையை மிகக் குறைந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் அதிகம் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே அதிகப்படியான பற்பசையைப் பயன்படுத்துவது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க டூத் பிரஸ்ஸை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் பலரும் பற்பசையை டூத் பிரஸின் முழுவதும் தடவுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இவ்வாறு தூரிகை முழுவதும் சேர்த்து அதிகம் பயன்படுத்துவது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனினும் பல் மருத்துவர்கள் அவ்வளவு பற்பசை தேவையில்லை என்று கூறுகின்றனர்.

பற்பசை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்?

ஒரு பட்டாணி அளவு பற்பசையை மட்டும் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் காணப்படும். மேலும், அதிகளவு பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் பற்பசையிலிருந்து வரும் நுரையானது உடலில் நுழைந்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே முடிந்தவரை, குறைந்த பற்பசையை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளிடம் கவனமாக இருப்பது

பற்பசை இனிப்பாக இருப்பதால், சிறு குழந்தைகள் கூட அதை சாப்பிடும் அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் பற்பசையில் காணப்படக்கூடிய அதிக அளவு ஃப்ளோரைடு குழந்தைகளின் உடலில் நுழைந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ஃப்ளூரைடு இல்லாத பற்பசையைத் தருவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Toothbrush For Children: உங்க குழந்தைக்கு டூத் பிரஸ் யூஸ் பண்றாங்களா? எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Kidney Failure: சிறுநீரக செயலிழக்கும் முன் தோன்றும் முக்கிய அறிகுறிகள் இதெல்லாம் தான்!

Disclaimer