Expert

வெறும் 3 பொருள்கள் போதும்.. பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே பற்பசையை இப்படி தயார் செய்யலாம்

How to prepare neem and turmeric toothpaste at home for healthy teeth: காலப்போக்கில், நம் பற்களில் ஒரு தடிமனான அழுக்கு படிந்து, பற்கள் மஞ்சள் நிறமாகத் தோன்றத் தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டிலேயே தயார் செய்யப்படக்கூடிய பற்பசையைப் பயன்படுத்துவது பற்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் பற்களின் ஆரோக்கியத்திற்கு வீட்டிலேயே பற்பசையைத் தயார் செய்வது குறித்து காண்போம்.
  • SHARE
  • FOLLOW
வெறும் 3 பொருள்கள் போதும்.. பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே பற்பசையை இப்படி தயார் செய்யலாம்


Easy recipe to make neem turmeric toothpaste at home naturally: நம் உடலில் காணப்படும் ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம் ஆகும். இதில் பற்களின் ஆரோக்கியமும் அடங்குகிறது. காலப்போக்கில், நம் பற்கள் பெரும்பாலும் மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்கிறோம். மேலும், பற்களில் மஞ்சள் நிற தகடு உருவாகிறது. அது மட்டுமல்லாமல், பல்வலி, பற்களில் சொத்தை பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பற்களைத் துலக்குவதன் மூலம் அதை சுத்தம் செய்யலாம். பெரும்பாலும், பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சந்தைகளில் கிடைக்கும் பற்பசை, மவுத்வாஷ் உள்ளிட்ட பொருள்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

ஆனால் இவை சில சமயங்களில் இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். எனினும், சில நேரங்களில் சில வீட்டு வைத்தியங்கள் திறம்பட செயல்படுகிறது. அவ்வாறு நம் வீட்டிலேயே எளிமையான முறையில் பற்களைச் சுத்தம் செய்ய உதவும் இயற்கையான பொருள்கள் குறித்து காணலாம். இந்த பொருள்களைக் கொண்டு பற்பசையை வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த பற்பசை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பற்களுக்கு மென்மையான ஸ்க்ரப்பராகவும், ஈறுகளை எரிச்சல் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் மஞ்சள் பற்களை சுத்தம் செய்வதற்கான பற்பசையைத் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து இயற்கை மருத்துவ நிபுணர் நீலிமா ராய் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் பற்களுக்கு பச்சை மஞ்சள் வேம்பு உப்பு பற்பசை

மஞ்சள் நிற பற்களை சுத்தம் செய்வதற்கு, பச்சை மஞ்சள், வேப்பிலை, பட்டை மற்றும் உப்பு போன்றவற்றைக் கொண்டு இந்த தேசி பற்பசையை தயார் செய்யலாம். உண்மையில், பழங்காலத்தில், பல் சொத்தை அல்லது ஈறு பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த தேசி பற்பசையைப் பயன்படுத்தி பல் துலக்குவார்கள். இது ஏன் நன்மை தருகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பற்பசையில் உள்ள சல்பேட் பற்களுக்கு நல்லதா? மருத்துவர் கூறுவது இங்கே!

அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மஞ்சள்

பச்சை மஞ்சளில் பற்களுக்கு பல ஆயுர்வேத பண்புகள் நிறைந்துள்ளது. இதன் பயன்பாடு பல வழிகளில் பற்களுக்கு உதவியாக இருக்கும். பச்சை மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இது பல் பராமரிப்புக்கு நன்மை பயக்கும். இது ஈறு பிரச்சனைகளைக் குணப்படுத்துவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவுகிறது.

உப்பு ஒரு சிறந்த ஸ்க்ரப்பர்

உப்பு என்பது பற்களை சுத்தம் செய்வதில் திறம்பட செயல்படும் ஒரு சிறந்த ஸ்க்ரப்பராக செயல்படுகிறது. பொதுவாக, உப்பு முழு வாய்க்கும் நன்மை பயக்கும். இது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பல நன்மைகளை தருகிறது. மேலும் இது வாயில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்க உதவுகிறது. இது தவிர, உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு நிறைந்த வேம்பு

வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை ஈறு சிதைவைக் குறைக்க உதவுகிறது. வேம்பில் உள்ள பண்புகள் ஈறுகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். பல் சொத்தை பிரச்சனையைக் குறைப்பதற்கு வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வேம்பில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் இயற்கை சேர்மங்கள் உள்ளன. இதன் மூலம் பல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். வேம்பு பயன்பாடு ஈறு வீக்கத்தைக் குறைக்கிறது. இது பீரியண்டோன்டிடிஸ் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, பற்களில் படிந்திருக்கும் கடினமான டார்ட்டரை அகற்றவும் வேம்பு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Toothpaste: ஃப்ரெஷ் நிறையா பேஸ்ட் வைத்து பல் துலக்குபவரா நீங்க? இது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

மஞ்சள், வேம்பு, உப்பு பற்பசையை எப்படி தயாரிப்பது?

இந்தப் பற்பசையைத் தயார் செய்வதற்கு பச்சை மஞ்சள், வேம்பு மற்றும் உப்பு போன்றவை தேவைப்படுகிறது.

  • முதலில் புதிய வேப்ப இலைகள், பட்டை, உப்பு மற்றும் பச்சை மஞ்சள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • பின்னர் மஞ்சள் வேர்களை ஒரு அரைக்கும் கல்லில் வைத்து நசுக்க வேண்டும்.
  • அதன் பிறகு, வேப்பம் பட்டை மற்றும் இலைகளை அதனுடன் கலந்து அரைக்கலாம்.
  • பிறகு அதனுடன் உப்பு சேர்க்க வேண்டும். இதில் நீங்கள் கல் உப்பையும் சேர்க்கலாம்.
  • இவை அனைத்தையும் கலந்து, ஒரு பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

பச்சை மஞ்சள் வேம்பு உப்பு பற்பசையை பயன்படுத்துவது எப்படி?

ஒவ்வொரு இரவும் பச்சை மஞ்சள், வேம்பு, உப்பு பற்பசையைக் கொண்டு பல் துலக்கி, பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.

மஞ்சள் வேம்பு உப்பு பற்பசையின் நன்மைகள்

  • இந்த பற்பசையானது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது உங்கள் பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • பின்னர் மஞ்சள் நிற தகடுகளை நீக்குகிறது. இது தவிர, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
  • இது பற்களின் பாக்டீரியாக்களைக் கொன்று பற்சிதைவைத் தடுக்க உதவுகிறது.
  • அது மட்டுமல்லாமல், இரவில் தூங்குவதற்கு முன் முழு வாயையும் சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது தகடுகளை அகற்றுகிறது.
  • இந்த பற்பசை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தாமல், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு

இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் இந்த தேசி பற்பசையை பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். அதை 15 முதல் 20 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவதன் மூலம் அதன் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: பல் துலக்க அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்றவங்களா நீங்க? எவ்வளவு போடணும்னு தெரிஞ்சிக்கோங்க..

Image Source: Freepik

Read Next

நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த 8 எளிய வழிகளைப் பின்பற்றுங்க

Disclaimer