How to reverse chronic diseases and improve longevity with simple lifestyle changes: நம் அன்றாட வாழ்வில் நாம் பலதரப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். குறிப்பாக, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இன்னும் சில நோய்கள் நாள்பட்ட நோய்களாகக் கருதப்படுகிறது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கலாம். இந்நிலையில், நாள்பட்ட நோய்களைத் தவிர்க்கவும், எந்த நோயும் இல்லாமல் நீண்ட ஆயுளை அதிகரிக்கவும் உதவும் வழிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
நாள்பட்ட நோய்களை மாற்றவும் நீண்ட ஆயுளை அதிகரிக்கவும் 8 எளிய வழிகள்
மைட்டோகாண்ட்ரியல் செயல்பாட்டை மேம்படுத்துவது
ஊட்டச்சத்து நிபுணர் முகர்ஜியின் கூற்றுப்படி, “மைட்டோகாண்ட்ரியாவை செல்களின் "பேட்டரிகள்" என்று நினைத்துப் பாருங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலம், ஆற்றலை அதிகரிக்கவும் மற்றும் சோர்வை எதிர்த்துப் போராடவும் பதப்படுத்தப்பட்ட உணவைக் குறைக்கவும்” என பகிர்ந்துள்ளார்.
அதாவது மைட்டோகாண்ட்ரியா என்பது உயிரணுக்களின் ஆற்றல் மையமாக விளங்குகிறது. இது செல்லுலார் சுவாசம் மூலம் குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி, ஏடிபி (ATP) வடிவில் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மைட்டோகாண்ட்ரியாவின் செயலிழப்பால் ஏற்படும் நோய்கள் மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் எனப்படுகிறது. இதைக் குறைப்பதற்கு நிபுணர் பகிர்ந்த வழிமுறைகளைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வேக வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த மூச்சுப்பயிற்சிகள் இதோ.. டாக்டர் தரும் டிப்ஸ்
உறுப்பு செயல்பாட்டை மேம்படுத்துவது
நிபுணரின் கூற்றுப்படி, “செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த சுத்தமான உணவு மற்றும் உடல் செயல்பாடு மூலம் உங்கள் குடல், கல்லீரல் மற்றும் தைராய்டை ஆதரிக்கலாம்” என கூறியுள்ளார்.
உறுப்பு செயல்பாட்டை மேம்படுத்த விரும்புபவர்கள், சீரான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். மேலும் போதுமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவை இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு அவசியமாகும்.
doctor-recommends-7-foods-that-will-naturally-improve-your-digestion-Main
நுண்ணுயிரியைப் பன்முகப்படுத்துவது
“சிறந்த செரிமானம் மற்றும் மனநிலைக்கு நார்ச்சத்து, புளித்த உணவுகள் மற்றும் புரோபயாடிக்குகளால் உங்கள் குடலை எரிபொருளாக மாற்றவும்” என நிபுணர் கூறியுள்ளார்.
அதாவது, குடலில் வாழக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகளின் பல்வேறு வகைகளையும், எண்ணிக்கையும் அதிகரிப்பதாகும். நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரோபயாட்டிக் உணவுகள், உடற்பயிற்சி மற்றும் போதுமான உறக்கம் மூலம் அடையலாம். இதனால் செரிமானத்தை மேம்படுத்துவது, நோயெதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தை ஆதரிக்கிறது.
நச்சு நீக்கம்
நச்சு நீக்க உறுப்புகளை ஆதரிப்பதன் மூலமும், நாள்பட்ட நோய்களைத் தடுப்பதன் மூலமும் தினசரி நச்சுகளை வெளியேற்றலாம் என நிபுணர் கூறியுள்ளார்.
நச்சு நீக்கம் என்பது உடலில் இருந்து நச்சுப் பொருட்கள், வளர்சிதை மாற்ற துணைப் பொருட்கள் மற்றும் பழக்கவழக்கங்களை அகற்றும் செயல்முறையைக் குறிக்கிறது. இது இயற்கையாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் நடைபெறுகிறது அல்லது சிறப்பு உணவுமுறைகள், போதைப்பொருள் திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதிகரிக்கப்படுகிறது. இது சிறந்த ஆரோக்கியம், அதிக ஆற்றல் மற்றும் பொது நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடலை குணமாக்கி, சருமத்தை பளபளப்பாக்க 3 நாளைக்கு இந்த 3 ட்ரிங்ஸ் குடிங்க..
ஊட்டச்சத்துக்களை சமநிலைப்படுத்துவது
நிபுணரின் கூற்றுப்படி, “உடலை எரிபொருளாகவும் ஊட்டமாகவும் வைத்திருக்க முழு உணவுகள், புரதங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என கூறுகிறார்.
அதன் படி, அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்களை சமநிலைப்படுத்துவதற்கு, நீர், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைச் சேர்த்து கொள்ள வேண்டும். இவை கலோரி உட்கொள்ளலை சமநிலைப்படுத்துவது, ஆரோக்கியமான எடையை பராமரித்தல், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துதல், மற்றும் நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல நன்மைகளை அளிக்கிறது.
View this post on Instagram
மன அழுத்தத்தை நிர்வகிப்பது
மன அழுத்தம் ஹார்மோன்கள் மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கிறது - சமநிலையில் இருக்க யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசத்தை முயற்சிக்கவும் என நிபுணர் பகிர்ந்துள்ளார். தீராத மன அழுத்தத்தின் காரணமாக, நாம் பல்வேறு நாள்பட்ட நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே, மன அழுத்தத்தை நிர்வகிக்க உடல் ரீதியான மற்றும் மன ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதில் வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், மற்றும் நினைவாற்றல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது அடங்கும்.
தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது
ஓய்வு என்பது உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் நேரம் ஆகும். எனவே படுக்கைக்கு முன்பாக திரைகளைத் தவிர்த்து, சீரான தூக்க முறைகளை நோக்கமாகக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிரார். தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அறிவாற்றல் செயல்பாட்டிற்கும், ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் அவசியமாகும். ந்ல்ல தூக்கம் மனநிலையை மேம்படுத்துவதுடன், நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
நீரேற்றமாக இருப்பது
நீரேற்றமாக வைப்பது செரிமானத்திற்கு உதவுகிறது, நச்சுக்களை வெளியேற்றுகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது என நிபுணர் கூறுகிறார். உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் அனைத்து உறுப்புகளுக்கும் செல்வதற்கும், கழிவுகள் வெளியேறுவதற்கும் நீரேற்றம் முக்கியமாகும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்வதும் நன்மை பயக்கும்.
இவ்வாறு தினசரி சிறிய மாற்றங்களை செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நாள்பட்ட நோய்களை கூட மாற்றியமைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆபத்து! இந்த 6 பிரச்சனைகள் உங்களுக்கா இருக்கா? மறதி வருவதற்கான ஆரம்ப நிலை இது தான்
Image Source: Freepik