Doctor Verified

நீண்ட நேரம் உட்கார்வது உங்கள் இதயத்தை பாதிக்குமா? மருத்துவர் எச்சரிக்கை!

உடல் செயல்பாடுகளைச் செய்யாமல் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. WHO எச்சரிக்கை மற்றும் மருத்துவர் ஆலோசனைகள் – இதய நோய்களைத் தவிர்க்க முக்கிய வழிமுறைகள்.
  • SHARE
  • FOLLOW
நீண்ட நேரம் உட்கார்வது உங்கள் இதயத்தை பாதிக்குமா? மருத்துவர் எச்சரிக்கை!


இன்றைய அதிவேக வாழ்க்கை முறையில் பலர் அலுவலகம், வீட்டு வேலைகள் அல்லது ஆன்லைன் பணிகள் காரணமாக மணிநேரங்களுக்குப் பிறகே எழுந்து நிற்கிறார்கள். ஆனால், இந்த "sedentary lifestyle" இதயத்திற்கு பெரிய அபாயம் என்று WHO எச்சரிக்கிறது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கிறார்கள்.

JAMA வெளியிட்ட அறிக்கையின்படி, இதய நோய் வரும் 12 ஆண்டுகளுக்கு முன்பே உடல் செயல்பாடு குறைந்து விடுகிறது. அதாவது, வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கியமானவை என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறையின் இணை இயக்குநர் மற்றும் தலைவரான டாக்டர் காயத்ரி ஆர்.பி. சிங், தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடாததால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே பகிர்ந்துள்ளார்.

உடல் செயல்பாடுகளைச் செய்யாததால் ஏற்படும் முக்கிய அபாயங்கள்

1. இரத்த ஓட்டம் மெதுவாகுதல்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் இரத்த ஓட்டம் குறைந்து, தமனிகளில் கொழுப்பு மற்றும் பிளேக் படிகிறது. இதனால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.

2. இன்சுலின் எதிர்ப்பு அதிகரிப்பு

செயல்பாடுகள் குறைவதால் தசை இயக்கம் குறைந்து, glucose metabolism பாதிக்கப்படுகிறது. இதனால் டைப்-2 நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

3. உடல் பருமன்

குறைந்த கலோரி எரிப்பு மற்றும் தண்ணீர் குறைவாக குடிப்பதால் obesity ஏற்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம், heart failure அபாயம் அதிகரிக்கிறது.

4. தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைதல்

செயல்பாடுகள் குறைந்தால் muscle loss மற்றும் bone density loss ஏற்படுகிறது. இதனால் நடக்கும் போது சமநிலை குலையும் அபாயம் உள்ளது.

5. மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்பு

உடல் செயல்பாடு குறைவதால் தூக்கம் பாதிக்கப்பட்டு, cortisol ஹார்மோன் அதிகரிக்கிறது. இது stress + blood pressure அதிகரித்து, இதயத்தை பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இதய துடிப்பை இயற்கையாக மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் பரிந்துரை

இதய நோய்களைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* ஒவ்வொரு 30-40 நிமிடங்களுக்கும் ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* அலுவலகத்தில் சிறிய இடைவெளிகள் எடுத்து சுறுசுறுப்பாக இருங்கள்.

* குப்பை உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், whole grains சேர்க்கவும்.

* தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

* யோகாவை பழக்கமாக்குங்கள்.

WHO வழிகாட்டுதல்கள்

* பெரியவர்கள் – வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான aerobic exercise

* குழந்தைகள் – தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி

* வாரத்திற்கு 2 நாட்கள் strength training (push-ups, squats) அவசியம்.

இறுதியாக..

உடல் செயல்பாடு குறைவது “silent killer” போல. அது இரத்த ஓட்டத்திலிருந்து தசை பலவீனம், மன அழுத்தம் வரை பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் தினமும் சிறிய மாற்றங்கள் – நடைப்பயிற்சி, யோகா, சரியான உணவு, தூக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தால் இதய ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும்.

Disclaimer: இந்த கட்டுரை பொது தகவலுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைகளுக்கு எப்போதும் தகுதியான மருத்துவரை அணுகவும்.

 

Read Next

இதய துடிப்பை இயற்கையாக மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 26, 2025 21:50 IST

    Published By : Ishvarya Gurumurthy