Thu Oct 29, 2026 | 10:49 AM IST

Doctor Verified

தேங்காய் இதயத்தை காக்குமா.? நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!

தேங்காய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? இயற்கை மருத்துவம், இதய நிபுணர், நவீன மருத்துவம் ஆகியோரின் பார்வைகள் வேறுபட்டாலும், வாழ்க்கை முறையுடன் சேர்ந்து உணவுப் பழக்கமே முக்கியம் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தேங்காய் இதயத்தை காக்குமா.? நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!தேங்காய் இதயத்தை காக்குமா.? நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.!

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதைச் சுற்றி சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் தேங்காய் அடங்கிய உணவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, “தேங்காயின் உண்மையான பாதிப்பு என்ன?” என்பதை மஸில் சென்ட்ரிக் ஆத்திரோபிடிக் & ஸ்போர்ட்ஸ் சர்ஜன் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கி உள்ளார்.

இயற்கை மருத்துவ பார்வை

இயற்கை மருத்துவத்தில் தேங்காயை இதயத்துக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நல்லதாகக் கருதுகின்றனர்.

* தேங்காய் (பால், எண்ணெய்) நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

* தென்னிந்தியா மற்றும் ஆசியாவின் பாரம்பரிய உணவில் தேங்காய் முக்கிய இடம் பெற்றது.

* அப்போதைய மக்கள் முழுமையான இயற்கை உணவுகளை சாப்பிட்டார்கள்.

* கடின உழைப்பு, குறைந்த மன அழுத்தம், எந்தவிதமான ஜங்க் உணவுகளும் இல்லாத வாழ்க்கை.

* இதன் விளைவாக, இதய நோய்கள் குறைவாக இருந்தன.

ஆகவே, இயற்கை மருத்துவர்கள் பார்வையில் “தேங்காய் தவறானதல்ல” எனினும், இது ஒரு பக்கம் மட்டுமே என மருத்துவர் குறிப்பிட்டார்.

இந்த பதிவும் உதவலாம்: காபி குடிக்கும்போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள் வயிற்றையும் கல்லீரலையும் சேதப்படுத்தும்..

இதய நிபுணர் பார்வை

இதய நிபுணர்களின் கணக்கில், தேங்காயில் சில பயனுள்ள தன்மைகள் இருந்தாலும், இன்றைய வாழ்க்கை முறையோடு அது அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.

* தேங்காயில் MCTs, லாரிக் அமிலம், நார்ச்சத்து போன்றவை உள்ளன – இது ஆரோக்கியத்திற்கு உதவும்.

* ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

* டிரான்ஸ் கொழுப்புகள் மறைந்திருக்கும்.

* அதிகப்படியான கலோரி உட்கருத்தல்

* நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு

* இயங்காத வாழ்க்கை முறை

இந்த சூழலில் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் உணவை அதிகப்படுத்துவது கொலஸ்ட்ராலை மேலும் உயர்த்தும் அபாயத்தை தரக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

நவீன மருத்துவ பார்வை

நவீன மருத்துவர்கள் இன்னும் நடைமுறைக்கு ஏற்ப எச்சரிக்கின்றனர்.

* இன்றைய ICU-களில் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு பிரச்சினைகள், பெருந்தொப்பை காரணமாக வந்த நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.

* ஒரு உணவு மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யாது.

* தேங்காய் சாப்பிட்டால் ஒரு நாளில் 20% உடல் எடையை குறைக்க முடியாது.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS.,DNB,MCh Ortho, DABRM (USA) (@drsanthoshjacobacademy)

மருத்துவர்கள் வலியுறுத்துவது

* தினசரி நடை

* தசை வளர்ச்சி பயிற்சி

* சர்க்கரை மற்றும் ஜங்க் உணவை தவிர்த்தல்

* புகை, மது பழக்கத்தை நிறுத்தல்

* நல்ல தூக்கம்

* கலோரி கட்டுப்பாடு

வாழ்க்கை முறை + மருத்துவ பராமரிப்பு ஆகியவை ஒன்றிணையும் போது தான், தேங்காய் போன்ற இயற்கை உணவுகள் உண்மையில் உதவும்.

இறுதியாக..

தேங்காய் பாரம்பரியமாக ஆரோக்கியத்திற்கு நன்மை தருபவையாக இருந்தாலும், இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக அதன் தாக்கம் மாறுகிறது. ஆகவே, தேங்காயை உட்கொள்வது நல்லது, ஆனால் அளவோடு மட்டுமே. அதற்கு மேலாக, உடற்பயிற்சி, மன அழுத்த கட்டுப்பாடு, நல்ல தூக்கம், மருத்துவ பராமரிப்பு ஆகியவையும் அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கியத் தகவல்களை மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட உடல்நல ஆலோசனைக்காக உங்கள் மருத்துவரை அணுகவும்

Read Next

→ World Heart Day: டிரான்ஸ் கொழுப்புகள் = இதய அபாயம்.! மருத்துவரின் எச்சரிக்கை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 28, 2025 20:03 IST

    Published By : Ishvarya Gurumurthy