ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் (World Heart Day) கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் – இதய நோய்களைத் தடுக்கும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது. இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று உணவுமுறை. குறிப்பாக, டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு உங்கள் இதயத்தையும் தமனிகளையும் மிக அதிகமாக சேதப்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat) என்பது ‘கெட்ட கொழுப்பு’. இது தமனிகளை சுருக்கி, இரத்த ஓட்டத்தை குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது என்று மும்பை ஒயிட் லோட்டஸ் சர்வதேச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் அனுஜ் சாத்தே கூறினார்.
டிரான்ஸ் கொழுப்பு உடலில் என்ன செய்கிறது?
* LDL கொழுப்பு அதிகரிக்கும் – இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது.
* HDL கொழுப்பு குறையும் – உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவும் நல்ல கொழுப்பு குறைகிறது.
* பிளேக் உருவாக்கம் – தமனிகளில் கொழுப்பு படிவுகள் தேங்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும்.
* தமனிகள் கடினமாகும் – இதனால் பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis) ஏற்படும்.
* இதய நோய் அபாயம் – மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கும்.
* அலர்ஜி அதிகரிக்கும் – டிரான்ஸ் கொழுப்பு உடலில் அலர்ஜியை தூண்டுகிறது, இது நீண்டகால சேதத்திற்கு காரணமாகிறது.
டிரான்ஸ் கொழுப்பு உண்டால் என்ன நோய்கள் வரும்?
* இதய நோய் (Heart Attack, Stroke)
* உயர் இரத்த அழுத்தம் (High BP)
* நீரிழிவு (Type 2 Diabetes)
* உடல் பருமன் (Obesity)
இந்த பதிவும் உதவலாம்: காலையிலே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 3 உணவுகள் – மருத்துவர் எச்சரிக்கை.!
டிரான்ஸ் கொழுப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
* எண்ணெய் மற்றும் பாக்கெட் உணவுகளை குறைக்கவும்.
* வீட்டில் தயாரித்த உணவுகளை முன்னுரிமை செய்யவும்.
* காய்கறி, பழம், பருப்பு, முழுதானியங்கள் அதிகம் சேர்க்கவும்.
* வேர்க்கடலை, வால்நட்ஸ், பாதாம், கடுகு அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் பயன்படுத்தவும்.
* வெளியே சாப்பிட வேண்டியிருந்தால், வறுத்த உணவுகளை விட, ஆவியில் வேகவைத்த அல்லது கிரில் செய்யப்பட்ட உணவுகளை தேர்வு செய்யவும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகள்
* தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* மன அழுத்தத்தை குறைக்க, யோகா அல்லது தியானம் செய்யலாம்.
* போதுமான தரமான உறக்கம் எடுக்க வேண்டும்.
* புகைப்பிடித்தல் மற்றும் மதுப் பழக்கங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
இறுதியாக..
இதய ஆரோக்கியம் நம் கைகளில்தான் உள்ளது. சிறிய மாற்றங்கள் கூட, நீண்டகாலத்தில் இதய நோய்களைத் தடுப்பதில் பெரிய பங்காற்றும். உலக இதய தினமான இன்று, டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலும் தவிர்க்கும் உறுதி எடுத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்போம்.
Disclaimer: இந்த கட்டுரை பொது தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனைக்காக உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.
Read Next
தேங்கியிருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்ற என்ன செய்யலாம்? மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 28, 2025 18:49 IST
Published By : Ishvarya Gurumurthy