World tuberculosis day 2025 how to reduce risk of tb: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி, உலக காசநோய் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் இந்த காசநோய் தினமானது நோயை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அனுசரிக்கப்படும் நாளாகும். மேலும், இந்த தினத்தில் தொற்று நோயை அகற்றுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துவது அவசியமாகும். காசநோய் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நோயாக இருப்பினும், இந்த நோய் உலகளவில் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது.
உலகின் மிகக் கொடிய தொற்று நோயான காசநோய், ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நோயை ஒழிப்பதன் அவசரத்தைக் காட்ட, உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் இருமல், தும்மல் அல்லது எச்சில் துப்பும்போது வெளியாகும் காற்றில் பரவும் துகள்கள் மூலம் காசநோய் பரவுகிறது. இது தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக் கூடியதாக அமைகிறது. இந்த காசநோயை அபாயங்களைக் குறைக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாளலாம். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tuberculosis: குழந்தைக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா. அப்ப இது காசநோய் தான்
காசநோய் தினம் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி கொண்டாடப்பட என்ன காரணம் தெரியுமா? ஏனெனில், இந்த தினமானது 1882 ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் கோச் காசநோய்க்கு காரணமான பாக்டீரியாவைக் கண்டுபிடித்த நாளைக் குறிக்கிறது. இந்த நோயைக் கண்டுபிடித்ததன் மூலம், சிகிச்சை, நோயறிதலைக் கண்டறிய முடிந்தது. அவ்வாறு நோயறிதலின் முக்கியத்துவம் மற்றும் சரியான சிகிச்சையின் அவசியத்தைக் குறித்து இந்த நாள் உணர்த்துகிறது.
காசநோய் என்றால் என்ன?
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது. இது உலகளவில் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. மேலும், உலகளவில் ஏற்படும் இறப்புக்கான முதல் 10 காரணங்களில் காசநோயும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காசநோய் என்பது ஒரு தொற்று காரணியால் ஏற்படும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். 2018 ஆம் ஆண்டில் இது சுமார் 1.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது. எனினும், காசநோய் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பல வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளது. இதில் காசநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்.
காசநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்
ஆரோக்கியமான உணவுமுறையின் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது காசநோய் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் முக்கியமானதாகும். எனவே அன்றாட உணவில் காய்கறிகள், பல்வேறு வகையான பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த புரத மூலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கலாம்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது
வழக்கமான உடல் செயல்பாடுகளின் மூலம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காசநோய் தொற்று அபாயத்தைக் குறைக்கவும் முடியும். எனவே வாரத்தின் பெரும்பாலான நாட்களில், விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான-தீவிர உடற்பயிற்சியை 30 நிமிடங்கள் செய்வதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: காசநோய் பரவ காரணம் என்ன? அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
நல்ல சுகாதாரத்தைப் பேணுவது
காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது அல்லது தும்மும்போது, காற்றில் பரவும் நீர்த்துளிகளால் காசநோய் பரவுதலுக்கு வழிவகுக்கிறது. எனவே அடிக்கடி கைகளைக் கழுவுதல், இருமலின் போது அல்லது தும்மும் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். மேலும், காசநோய் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது போன்ற நல்ல சுகாதார நடைமுறைகளைப் பேணுவது மிகவும் முக்கியமாகும்.
புகைபிடிப்பதை நிறுத்துவது
புகைபிடிப்பது நுரையீரல் ஆரோக்கியத்தை சேதப்படுத்தலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால், காசநோய் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம். மேலும், புகைபிடித்தல் பல நோய்களுக்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் காசநோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம்.
போதுமான தூக்கம்
நோயெதிர்ப்புச் சக்தியை ஆதரிக்க போதுமான தூக்கம் அவசியமாகும். எனவே நல்ல தரமான தூக்கம் பெறுவதன் மூலம் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடலாம். ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். நல்ல இரவு தூக்கத்திற்கு, தூங்கும் போது நீலநிற ஒளிப்பயன்பட்டைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான தூக்க சுகாதாரப் பழக்கங்களை உருவாக்குவது போன்றவற்றைக் கையாள வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிப்பது
நாள்பட்ட மன அழுத்தத்தால் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தப்பட்டு, தொற்று அபாயம் அதிகரிக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளை அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, மன அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: World TB Day 2025: TB உணர்த்தும் அறிகுறிகளும்.. அதை தடுக்கும் வழிமுறைகளும்..
Image Source: Freepik