Healthy habits that cause weight gain: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக உடல் எடை அதிகரிப்பு இன்று நாளடைவில் அதிகரித்து வரும் பொதுவான பிரச்சனையாகும். Obesity என்றழைக்கப்படும் உடல் பருமனால் நீரிழிவு, இதய நோய் மற்றும் மூட்டு பிரச்சனைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் உடல் பருமன் காரணமாக இது போன்ற நாள்பட்ட பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர்.
எனவே தான், உடல் பருமன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகளாவிய உடல் பருமன் தினம் ஆண்டுதோறும் மார்ச் 4 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் உடல் பருமன் ஏற்பட காரணங்கள், தடுப்பு உத்திகள் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகள், பொதுக் கொள்கைகள் மற்றும் மருத்துவ தலையீடுகளை ஊக்குவிக்கிறது. அவ்வாறே, ஆச்சரியப்படும் விதமாக, 'ஆரோக்கியமானது' என்று கருதப்படும் சில பழக்கவழக்கங்களும் தற்செயலாக உடல் பருமனுக்கு பங்களிக்கக் கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: Anti Obesity: உடல் பருமனாக இருப்போர் கவனத்திற்கு.. மாதவன், மோகன்லால் என 10 பேர் குழு அமைத்த பிரதமர் மோடி!
உடல் பருமனை அதிகரிக்கும் பழக்கங்கள்
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில பழக்க வழக்கங்கள் உடல் பருமனை அதிகரிக்கலாம். இதில் என்னென்ன பழக்கங்கள் உடல் பருமனை அதிகரிக்கும் என்பதைக் காணலாம்.
கலோரிகளைக் குறைக்க உணவைத் தவிர்ப்பது
பொதுவாக உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என பலரும் நினைப்பர். இதனால் சிலர் குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான ஒரு நல்ல வழியாகக் கருதுவர். ஆனால், இது பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாத பசிக்கு வழிவகுக்கிறது. இதனால், நாளின் பிற்பகுதியில் அதிகம் சாப்பிடுவதைத் தூண்டுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கலாம்.
குறைந்த கொழுப்பு உணவுமுறையைத் தேர்ந்தெடுப்பது
குறைந்த கொழுப்பு, சர்க்கரை இல்லாத உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமானவை என்று பலரும் நம்புகின்றனர். எனினும், இந்த வகை உணவு தயாரிப்புகளில் பெரும்பாலும் சர்க்கரைகள், செயற்கை இனிப்புகள் அல்லது பதப்படுத்திகள் சேர்க்கப்படுகிறது. இதை அதிகம் உட்கொள்வது அதிகப்படியான உணவு மற்றும் கொழுப்பு சேமிப்பைத் தூண்டுகிறது. இதனால் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அதிகம் உட்கொள்வது
நட்ஸ், கிரானோலா, அவகேடோ நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானவை மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், இவை கலோரிகள் நிறைந்தவையாகும். இந்த வகை உணவுகளை பகுதி கட்டுப்பாடு இல்லாமல் உட்கொள்ளும்போது, அவை விரைவாகச் சேர்ந்து எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.
கார்டியோவை அதிகம் நம்பியிருப்பது
இதய ஆரோக்கியத்திற்கு கார்டியோ சிறந்ததாகும். எனினும் வலிமை பயிற்சி இல்லாமல் அதை அதிகமாக நம்பியிருப்பது தசை இழப்பு மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கலாம். இந்த மெதுவான வளர்ச்சிதை வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கலாம். இது கலோரிகளை உடல் திறம்பட எரிப்பதை கடினமாக்குகிறது. மேலும் மெலிந்த தசை வெகுஜனத்தை பராமரிக்கவும் கொழுப்பு எரிப்பை அதிகரிக்கவும் வலிமை பயிற்சி அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Obesity in Children: குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்படுவது ஏன்? ஹார்மோன் காரணங்கள் இங்கே!
அதிக பழச்சாறுகள், ஸ்மூத்திகளை அருந்துவது
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், இதை சாறு வடிவில் எடுத்துக் கொள்வது அதில் உள்ள நார்ச்சத்துக்களை நீக்குகிறது. மேலும் இது சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிக்கிறது. இது தவிர தேன், முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்ற அதிக கலோரி பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திகளும் எடை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
அதிகம் கிரீன் டீ, மூலிகை டீ குடிப்பது
கிரீன் டீ அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனினும், இதை அதிகமாக உட்கொள்வது செரிமானம் மோசமடைவதற்கும், மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கவும், அசிடிட்டியை ஏற்படுத்தவும் வழிவகுக்கலாம். இவை அனைத்துமே காலப்போக்கில் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கலாம்.
மிகக் குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது
நல்ல, சீரான தூக்கம் எடை மேலாண்மைக்கு மிகவும் முக்கியமாகும். ஆனால் அதிகப்படியான தூக்கம் மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது இரண்டுமே வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது கொழுப்பு குவிப்பை ஊக்குவித்து, உடல் பருமனை அதிகரிக்கிறது.
இந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்களில் உள்ள இது போன்ற அபாயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும். மேலும், சீரான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதன் மூலம் தற்செயலாக எடை அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Obesity and overweight: எக்ஸ்ட்ரா வெயிட்டைக் குறைக்க படாதபாடு படுறீங்களா? - முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க!
Image Source: Freepik