Does being overweight affect brain function: ஆண்டுதோறும் உலக மூளை தினம் ஜூலை மாதம் 22 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது மூளை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வாழ்நாள் முழுவதும் நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினமாகும். மூளை ஆரோக்கியம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வயதில் உள்ள அனைவருக்குமே மிகவும் இன்றியமையாததாகும். மூளை ஆரோக்கியம் பிறப்பிலிருந்து தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடரக்கூடிய ஒரு வாழ்நாள் பயணமாகக் கருதப்படுகிறது.
உண்மையில், மூளை ஆரோக்கியம் என்பது தெளிவாக சிந்திக்கவும், திறம்பட கற்றுக்கொள்ளவும், முக்கியமான தகவல்களை நினைவில் கொள்ளவும் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவும் அனுமதிக்கும் நன்கு செயல்படக்கூடிய மூளையைப் பராமரிப்பதைக் குறிக்கிறது. இவை மனதை கூர்மையாக வைத்திருப்பதுடன், உணர்ச்சி ரீதியாக சமநிலையில் இருப்பது மற்றும் ஒட்டுமொத்த மன நல்வாழ்வை ஆதரிப்பது ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Causes Of Obesity: உடல் பருமன் ஏற்பட இது தான் காரணம்…
உடல் பருமன்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, உலகளவில் உடல் பருமன் தொற்றுநோய் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிப்பதாக அமைகிறது. இவை குறிப்பிடத்தக்க பொது சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 1970 களில் இருந்து உடல் பருமன் விகிதங்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது உலகளாவிய சுகாதார கவலையாக மாறி வருகிறது.
உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு குவிவதால் ஏற்படக்கூடியதாகும். இது பெரும்பாலும் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகும். பல ஆண்டுகளாக, மூளையில் உடல் பருமனின் விளைவுகள் இந்த முக்கிய உறுப்பில் நிரந்தர மாற்றங்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காணலாம்.
உடல் பருமனால் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படும் பக்க விளைவுகள்
வாழ்க்கை முறை தேர்வுகள் மூளையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பிற்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக உடலில் பல்வேறு உறுப்புகளில் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்
உடல் பருமன் காரணமாக பெரும்பாலும் உடல் முழுவதும் நாள்பட்ட வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுகிறது. இந்த செயல்முறைகள் மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். மேலும், இது நரம்பியல் சேதம் மற்றும் பலவீனமான மூளை செயல்பாடு போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அறிவாற்றல் செயல்பாடு பாதிப்பு
பல ஆய்வுகளில் உடல் பருமனுக்கும், அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்துள்ளது. சரியான வழிமுறைகள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும் உடல் பருமன், நினைவாற்றல், கவனக்குறைபாடு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட பலவீனமான அறிவாற்றல் செயல்திறனுடன் தொடர்புடையதாக சான்றுகளில் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Obesity and overweight: எக்ஸ்ட்ரா வெயிட்டைக் குறைக்க படாதபாடு படுறீங்களா? - முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க!
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூளை செயல்பாடு
உடல் எடை அதிகமுள்ள மக்களின் கொழுப்பு திசு அடிபோகைன்கள் எனப்படும் பல ஹார்மோன்கள் மற்றும் சமிக்ஞை மூலக்கூறுகளை உருவாக்குகிறது. லெப்டின் மற்றும் அடிபோனெக்டின் போன்ற இந்த ஹார்மோன்களில் சில பசி, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் சமநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், உடல் பருமன் லெப்டின் எதிர்ப்பு உட்பட ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கலாம். இதனால் மூளை இனி திருப்தி சமிக்ஞைகளுக்கு பதிலளிக்காது.
நரம்புச் சிதைவு நோய்களின் அதிகரித்த ஆபத்து
உடல் பருமன் காரணமாக அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவு நோய்களின் அபாயமும் அதிகரிக்கலாம். இந்த தொடர்பின் அடிப்படையிலான சரியான வழிமுறைகள் சிக்கலானவை ஆகும். இது வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வாஸ்குலர் சேதம் உள்ளிட்ட காரணிகளின் கலவையை உள்ளடக்கியிருக்கலாம்.
மூளையின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
உடல் பருமனுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி அறிந்திருப்போம். மூளை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அதன் சாத்தியமான தாக்கத்தைக் குறைக்க உடல் பருமனைத் தடுப்பது அவசியமாகும். உடல் எடை பருமனைக் குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
- சீரான, கலோரி கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சத்தான உணவைக் கையாள வேண்டும். மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகளுடன் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடத் தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
- வாரத்திற்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் அல்லது டென்னிஸ் போன்ற மிகவும் சௌகரியமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நீரிழப்பு காரணமாக, சில நேரங்களில் இது தேவையற்ற கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கலாம். எனவே நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Obesity: நீங்க குண்டாக உணவு மட்டும் தான் காரணமா? மருத்துவர் கூறும் காரணங்கள் இங்கே!
Image Source: Freepik