Daily habits that damage your brain health – what to avoid: நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் மூளைப்பகுதி நம்முடைய ஒவ்வொரு எண்ணம், உணர்ச்சி மற்றும் செயலுக்கும் சக்தியை அளிக்கிறது. எனவே தான் மூளை ஆரோக்கியத்தைப் பராமரிப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல அன்றாட பழக்கவழக்கங்கள் அமைதியாக அதன் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. மேலும் இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மெதுவாக பலவீனப்படுத்தும்.
குறிப்பாக, இந்த பிரச்சனைகள் காலப்போக்கில் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் போன்ற கடுமையான நிலைமைகளின் அபாயத்தை கூட அதிகரிக்கக்கூடும். இதில் நல்ல செய்தி என்னவெனில், இந்த பழக்க வழக்கங்களைக் கண்டறிந்து அதில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதில் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் பொதுவான பழக்கங்களையும், அவை எவ்வாறு மூளையைப் பாதிக்கிறது என்பதையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகளை டெய்லி சாப்பிட்டால் உங்க மூளை மந்தமாகிடும்! அதன் தீமைகள் இங்கே!
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் தினசரி பழக்கங்கள்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது
ஆய்வு ஒன்றில், நீண்ட நேரம் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் குறைந்து, மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்குவதைக் குறைக்கிறது. ஆய்வுகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மூளையின் கட்டமைப்பு மாற்றங்களுடன், குறிப்பாக கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு முக்கியமான பகுதியான ஹிப்போகேம்பஸில் இணைக்கிறது.
இந்நிலையில் இடைவேளையின் போது நடப்பது அல்லது உட்கார்ந்து நிற்கும் மேசையைப் பயன்படுத்துவது போன்ற சில எளிய மாற்றங்களைக் கையாள்வதன் மூலம் இரத்த ஓட்டம் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தலாம்.
மோசமான உணவு முறையைப் பின்பற்றுவது
உடலின் மொத்த ஆற்றலில் மூளைப்பகுதி சுமார் 20% ஐப் பயன்படுத்துகிறது. எனவே ஊட்டச்சத்து அதன் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. இவை மூளை வயதாவதை துரிதப்படுத்தும் காரணிகளாகும்.
இதற்கு மாற்றாக, முழு உணவுகள், குறிப்பாக ஒமேகா-3 நிறைந்த மீன், இலை கீரைகள், பெர்ரி, கொட்டைகள் மற்றும் விதைகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை மூளை செல்களைப் பாதுகாக்கும் மற்றும் நியூரான்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது.
தரமான தூக்கத்தைத் தவிர்ப்பது
NIH இல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆழ்ந்த தூக்கத்தின் போது, மூளை முக்கியமான வீட்டு பராமரிப்பு பணிகளைச் செய்கிறது, இது பீட்டா-அமிலாய்டு போன்ற நச்சுக்களை நீக்கவும், குறுகிய கால நினைவுகளை நீண்ட கால சேமிப்பில் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. இந்நிலையில், நாள்பட்ட தூக்கமின்மை இந்த செயல்முறையை சீர்குலைத்து மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
எனினும், சரியான ஓய்வு எடுப்பதன் மூலம் கவனத்தையும் கற்றல் திறனையும் கணிசமாக மேம்படுத்தலாம். எனவே நாள்தோறும் 7-9 மணி நேரம் தடையின்றி சீரான தூக்கத்தைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த வயசுலயும் மூளை கம்ப்யூட்டர் மாறி வேலை செய்ய இந்த 7 ஃபுட்ஸ உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க
நாள்பட்ட மன அழுத்தம்
ஆய்வு ஒன்றில், நீடித்த மன அழுத்தம் கார்டிசோலின் நிலையான வெளியீட்டைத் தூண்டுகிறது. இது அதிகளவில் ஹிப்போகேம்பஸை சுருக்கி, புதிய நினைவுகளை உருவாக்கும் மூளையின் திறனைக் குறைக்கிறது. இது தூக்க முறைகளையும் சீர்குலைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
தினந்தோறும் ஆழ்ந்த சுவாசம், ஜர்னலிங், யோகா அல்லது வழக்கமான உடற்பயிற்சி போன்ற மன அழுத்த மேலாண்மை உத்திகளைக் கையாளலாம். இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், மன சோர்வுக்கு எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்துகிறது.
படுக்கைக்கு முன் திரைகளுக்கு அதிகமாக வெளிப்பாடு
திரைகள் வெளியிடக்கூடிய நீல ஒளியானது உடலுக்கு தூங்க வேண்டிய நேரம் இது என்று சமிக்ஞை செய்யும் மெலடோனின் என்ற ஹார்மோனை பாதிக்கிறது. இது இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைத்து, நினைவாற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் செல்லுலார் பழுதுபார்ப்புக்கு மூளைக்குத் தேவையான ஆழ்ந்த தூக்கத்தின் தரத்தைக் குறைக்கிறது.
எனவே படுக்கைக்கு முன் புத்தகங்கள், மங்கலான விளக்குகள் அல்லது அமைதியான ஒலிக்கு மாறுவது ஆரோக்கியமான தூக்க முறைகளைக் கையாளலாம். இவை ஆரோக்கியமான தூக்க முறைகளை மீட்டெடுக்கவும் மன தெளிவை மேம்படுத்தவும் உதவுகிறது.
மூளை அன்றாட பழக்கவழக்கங்களுக்கு வியக்கத்தக்க வகையில் உணர்திறன் மிக்கதாக இருக்கலாம். ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் சிறிய, நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும், இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. எந்தவொரு வாழ்க்கை முறை அல்லது மருத்துவ நிலை மாற்றத்தைக் கையாள்வதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Brain Tips: உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க இந்த 8 குறிப்புகளை பின்பற்றவும்
Image Source: Freepik