Anti Obesity: உடல் பருமனாக இருப்போர் கவனத்திற்கு.. மாதவன், மோகன்லால் என 10 பேர் குழு அமைத்த பிரதமர் மோடி!

உடல் பருமன் என்பது நாட்டில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உணவில் 10 சதவீதம் அளவு எண்ணெய்யை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 பேரை பரிந்துரை செய்துள்ளார்.
  • SHARE
  • FOLLOW
Anti Obesity: உடல் பருமனாக இருப்போர் கவனத்திற்கு.. மாதவன், மோகன்லால் என 10 பேர் குழு அமைத்த பிரதமர் மோடி!

Anti Obesity Awareness: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி, அதிகரிக்கும் உடல் பருமன் தொற்றுநோய் குறித்து நாட்டு மக்களிடையே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 பேரில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை

பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 119 அத்தியாயத்தில் தனது உரையை நிகழ்த்தினார். இதில் உடல் பருமன் பிரச்சனை குறித்து கவலை தெரிவித்த அவர், 8 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சனை என்பது 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: Weight Loss By Ayurveda: காலையில் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை கிடுகிடுன்னு குறையுமாம்...!

எண்ணெய் பயன்பாட்டை குறைக்க பிரதமர் மோடி அறிவுரை

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 250 கோடி மக்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும் WHO தரவுகளை மேற்கோள் காட்டி பேசினார். உணவு பழக்கங்களில் குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம், நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமாக வாழவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்கள் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்குமாறு மக்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

pm modi advice fight obesity

எண்ணெய் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு

சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஒருவர் மாதந்தோறும் 10% குறைவான எண்ணெய் வாங்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு பரிந்துரை விடுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி உடல் பருமன் பிரச்சனையை எதிர்த்து போராடுவதற்கும், உணவில் எண்ணெய் அளவை குறைக்க ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 பேரை பிரதமர் மோடியே பரிந்துரை செய்துள்ளார். அதேபோல் இவர்கள் பங்களிப்பு மூலம் அடுத்தடுத்து உடல்பருமனுக்கு எதிரான இயக்கம் விரிவடையும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

10 பேர் கொண்ட குழு அமைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பரிந்துரை செய்த 10 பேர் யார் யார் என்ற விவரம் குறித்து பார்க்கையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, நடிகர் மோகன்லால், நடிகர் மாதவன், போஜ்புரி பாடகர் மற்றும் நடிகர் நிராஹூவா, துப்பாக்கி சூடு சாம்பியன் மனு பாக்கர், பளுதூக்கும் வீரர் மீராபாய் சானு, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் எம்பி சுதா மூர்த்தி ஆகியோரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.

Untitled design - 2025-02-26T004656.008

உடல் எடை குறைக்க உதவும் எளிய வழிகள்

  • தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
  • உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும், இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும், மேலும் உங்கள் பசியை விட அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.
  • போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் கூடுதல் கொழுப்பு சேராது மற்றும் நச்சுப் பொருட்கள் உங்கள் உடலில் இருந்து வெளியேற முடியும்.
  • உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக முக்கியம்
  • தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது வாழ்க்கைக்கு மிக முக்கியமாகும். உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கை மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவ வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் குறைந்தது தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • உணவை மென்று சாப்பிடுங்கள்
  • சாப்பிடுவதற்கு முன் உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள்.
  • உணவை மென்று சாப்பிடுவதால் உடல் அதை ஜீரணிக்க எளிதாகிறது.
  • உணவை விழுங்குவதற்கு முன், அதை 32 முறை சரியாக மென்று சாப்பிட வேண்டும்.
  • சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகள், மதுவை தவிர்க்கவும்...
  • உங்கள் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவை குறைக்க வேண்டும்.
  • ஒரு நாளைக்கு நீங்கள் 53 முதல் 55 கிராம் புரதத்தை உட்கொள்ளலாம், அதே சமயம் பெண்கள் ஒரு நாளைக்கு 43 முதல் 46 கிராம் புரதத்தை உட்கொள்ளலாம்.
  • சர்க்கரையில் எந்த வகையான ஊட்டச்சத்தும் இல்லை. இதை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
  • சர்க்கரைக்கு பதில் தேன் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும்.
  • மது எந்த விதத்திலும் உடலுக்கு நல்லதல்ல. முற்றிலும் பாதிப்பு கொண்டிருக்கும் மதுவை உடனே கைவிடுவது நல்லது.

மேலும் படிக்க: மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத உணவுகள் இங்கே

உடல் எடையை குறைக்க உங்கள் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது வாழ்க்கை மிக முக்கியமாகும். உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல் உங்கள் ஆரோக்கியமும் உங்கள் கையில் தான். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

image source: freepik

Read Next

Obesity in India: உடல் எடை குறைய பிரதமர் மோடி சொன்ன அறிவுரையை உடனே ஃபாலோ பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்