சர்க்கரை சாப்பிடும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் புதிய செயல்முறை! பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்

குழந்தைகளுக்கு சர்க்கரை உட்கொள்ள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கியமான விருப்பங்களை தேர்வு செய்ய உதவ வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
  • SHARE
  • FOLLOW
சர்க்கரை சாப்பிடும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் புதிய செயல்முறை! பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்


பிரதமர் மோடி தனது மாதாந்திர 'மன் கி பாத்' உரையின் 122வது எபிசோடில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ஒவ்வொரு உரையிலும் நாட்டு மக்களின் நலன் கருதி ஏதேனும் ஒன்றை அறிவுரையாக கொடுப்பார். கடந்த மன் கி பாத் உரையில் நாட்டில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது என்றும் எண்ணெய் உட்கொள்ளலை குறைக்க வேண்டும் என்றும் அறிவுரை விடுத்தார். இந்த நிலையில் இன்றைய உரையில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அறிவரை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சர்க்கரை வாரியங்கள் நிறுவ வேண்டும் என்ற சிபிஎஸ்இ-ன் சமீபத்திய உத்தரவை பிரதமர் மோடி வரவேற்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: ஐஸ் வாட்டர் குடித்தால் எடை ஏறுமா? - அச்சச்சோ நிபுணர் சொல்லும் பக்கவிளைவுகளை தெரிஞ்சிக்கோங்க!

பிரதமர் மோடி 122வது மன் கி பாத் உரை

மேலும் பள்ளிகளில் கரும்பலகைகளைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் இப்போது சில பள்ளிகளில் சர்க்கரை பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன - கரும்பலகை அல்ல, அவை சர்க்கரை வாரியம் என குறிப்பிட்டார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இந்த முயற்சி ஆனது குழந்தைகளுக்கு சர்க்கரை உட்கொள்ளல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், மேலும் ஆரோக்கியமான விருப்பங்களை தேர்வு செய்ய உதவும் நோக்கத்தை கொண்டுள்ளது என குறிப்பிட்டு பாராட்டினார்.

pm-modi-praises-cbse

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இந்த வழிகாட்டுதலின் மூலம், எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும், தாங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறோம் என்பதை புரிந்து கொண்டு, குழந்தைகள் தாங்களாகவே ஆரோக்கியமான விருப்பங்களை தேர்ந்தெடுக்க தொடங்குகின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் ஃபிட் இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்ப்பதற்கு இந்த முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என கூறினார்.

அதேபோல், இது ஒரு தனித்துவமான முயற்சி, இதன் தாக்கமும் மிகவும் நேர்மறையானதாக இருக்கும். குழந்தை பருவத்திலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்ப்பதில் இது மிகவும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

ஃபிட் இந்தியா குறித்து பிரதமர் மோடி

பல பெற்றோர்கள் இதை பாராட்டியதாகவும், இதுபோன்ற முயற்சிகள் அலுவலகங்கள், கேன்டீன்கள் மற்றும் நிறுவனங்களிலும் எடுக்கப்படும் என தான் நம்புவதாக நம்பிக்கை தெரிவித்த அவர், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியம் இருந்தால், எல்லாம் இருக்கிறது. ஃபிட் இந்தியா ஒரு வலுவான இந்தியாவின் அடித்தளம் என கூறினார்.

சர்க்கரையின் அதீத நுகர்வு காரணமாக பள்ளி மாணவர்களிடையே டைப் 2 நீரிழிவு பிரச்சை அதிகரித்து வருகிறது. இந்த நிலை கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில் சிபிஎஸ்இ பள்ளியில் சர்க்கரை வாரியங்கள் அறிமுகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) பரிந்துரைகளைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜூலை 15, 2025க்குள் சர்க்கரை வாரியங்கள் நிறுவ உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: பெண்களில் அதிகரிக்கும் தைராய்டு பிரச்னை.. காரணங்களும்.. அறிகுறிகளும்..

இதுபோன்ற வரவேற்க்கத்தக்க உத்தரவை சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் மட்டுமின்றி பிற தனியார் பள்ளிகளிலும் மாநிலங்கள் நடத்தும் அரசி பள்ளிகளிலும் முறையாக அறிமுகப்படுத்துவதோடு அதை முறையாக செயல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

image source: social media

Read Next

Thyroid Diet: தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது?

Disclaimer

குறிச்சொற்கள்