Obesity in India: உடல் எடை குறைய பிரதமர் மோடி சொன்ன அறிவுரையை உடனே ஃபாலோ பண்ணுங்க!

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தற்போது அதிகரித்தும் வரும் உடல் பருமன் பிரச்சனையில் நாட்டு மக்கள் கவனம் செலுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்கான சில வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.
  • SHARE
  • FOLLOW
Obesity in India: உடல் எடை குறைய பிரதமர் மோடி சொன்ன அறிவுரையை உடனே ஃபாலோ பண்ணுங்க!


PM Modi advice people to fight obesity (Obesity in India:): 2022 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 250 கோடி மக்கள் அதிக எடையுடன் இருந்திருக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் பருமன் பிரச்சனையில் இருந்து மீண்டு உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி, அதிகரிக்கும் உடல் பருமன் தொற்றுநோய் குறித்து நாட்டு மக்களிடையே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 119 அத்தியாயத்தில் தனது உரையை நிகழ்த்தினார். இதில் உடல் பருமன் பிரச்சனை குறித்து கவலை தெரிவித்த அவர், 8 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சனை என்பது 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: Weight Loss By Ayurveda: காலையில் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை கிடுகிடுன்னு குறையுமாம்...!

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 250 கோடி மக்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும் WHO தரவுகளை மேற்கோள் காட்டி பேசினார். உணவு பழக்கங்களில் குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம், நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமாக வாழவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்கள் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்குமாறு மக்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

pm modi advice fight obesity

உடல் பருமன் குறைய பிரதமர் மோடி அட்வைஸ்

சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஒருவர் மாதந்தோறும் 10% குறைவான எண்ணெய் வாங்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு பரிந்துரை விடுத்துள்ளார். இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்து வரும் கவலையாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி இதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து ஆரோக்கியமாக இருக்கவும் உடல் பருமனை தடுக்கவும் என்ன நடவடிக்கை தேவையோ அதை எடுக்க வேண்டும் என அறிவுரைவிடுத்துள்ளார்.

உண்மையாகவே அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சனை

இப்போதெல்லாம் மெலிந்த உடலுடன் 30 வயதுக்கு மேல் இருப்பவர்களை காண்பது அரிதாக உள்ளது. உடல் பருமன் பிரச்சனையை பலரும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதை தடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை.

அதிகரித்து வரும் உடல் பருமன் காரணமாக, உடலில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பல நேரங்களில் உடல் பருமன் உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆரம்பக் காரணமாகிறது. நீரிழிவு நோய் முதல் இதய நோய் வரை, அனைத்தும் ஏற்பட உடல் பருமன் பிரச்சனையும் முக்கிய காரணமாகும்.

உடல் பருமன் காரணமாக, பல நேரங்களில் ஒருவர் அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறார். பல சமயங்களில், உடலில் உடல் பருமன் அதிகரிப்பதால் ஒருவர் மன ரீதியாகவும் தொந்தரவு அடையத் தொடங்குகிறார்.

weight loss tips

உடல் பருமன் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள்

நீரிழிவு நோய்

  1. நீரிழிவு நோய்க்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும்.
  2. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடல் பருமனைக் குறைப்பது கொஞ்சம் கடினமாகிவிடும்.
  3. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் எடை வேகமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால், அது டைப் 2 நீரிழிவு நோயின் தொடக்கமாக இருக்கலாம்.
  4. உடல் பருமன் கொழுப்பு அமிலங்களின் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.
  5. உடல் பருமனைத் தடுக்க, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள் மற்றும் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தம்

  • இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
  • உங்கள் இரத்த அழுத்தம் 140/90 mmHg அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • உடல் பருமன் காரணமாக, உடலில் கொழுப்பு பெரும்பாலும் சேரும். இதன் காரணமாக இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு உடலின் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மருத்துவரை அணுகி ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

இதய நோய்

  • உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள். அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கின்றன.
  • உடல் பருமன் காரணமாக, உடலில் கொழுப்பு அமிலங்கள் குவிகின்றன.
  • இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் குறித்த பயம் தொடர்ந்து நிலவுகிறது.
  • உடல் பருமனைத் தவிர்க்க, பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் உலர் பழங்களை சேர்க்கலாம்.

பக்கவாதம்

  • உடல் பருமன் வேகமாக அதிகரிக்கும் நபர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
  • மூளைக்கு இரத்தம் சரியாகச் செல்லாதபோது பக்கவாதம் ஏற்படுகிறது.
  • இந்த நிலையில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • உடல் பருமன் காரணமாக, பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பெருமளவில் அதிகரிக்கிறது.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

  • உடல் பருமன் தூக்கத்தில் மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தும்.
  • உடல் பருமன் காரணமாக, ஒருவர் இரவில் சரியாக தூங்க முடியாமல் போகிறது, இது பின்னர் நோய்க்கு காரணமாகிறது.
  • சில நேரங்களில், குடலில் கொழுப்பு சேர்வதால் இரத்த நாளங்கள் இரத்தத்தை சரியாக விநியோகிக்க முடியாது.
  • இதன் காரணமாக நீங்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.
weight management diet plan

உடல் எடை குறைக்க எளிய வழிகள்

  1. தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
  2. உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும், இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும், மேலும் உங்கள் பசியை விட அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.
  3. போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் கூடுதல் கொழுப்பு சேராது மற்றும் நச்சுப் பொருட்கள் உங்கள் உடலில் இருந்து வெளியேற முடியும்.
  4. உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக முக்கியம்
  5. தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது வாழ்க்கைக்கு மிக முக்கியமாகும். உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கை மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவ வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் குறைந்தது தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
  6. உணவை மென்று சாப்பிடுங்கள்
  7. சாப்பிடுவதற்கு முன் உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள்.
  8. உணவை மென்று சாப்பிடுவதால் உடல் அதை ஜீரணிக்க எளிதாகிறது.
  9. உணவை விழுங்குவதற்கு முன், அதை 32 முறை சரியாக மென்று சாப்பிட வேண்டும்.
  10. சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகள், மதுவை தவிர்க்கவும்...
  11. உங்கள் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவை குறைக்க வேண்டும்.
  12. ஒரு நாளைக்கு நீங்கள் 53 முதல் 55 கிராம் புரதத்தை உட்கொள்ளலாம், அதே சமயம் பெண்கள் ஒரு நாளைக்கு 43 முதல் 46 கிராம் புரதத்தை உட்கொள்ளலாம்.
  13. சர்க்கரையில் எந்த வகையான ஊட்டச்சத்தும் இல்லை. இதை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
  14. சர்க்கரைக்கு பதில் தேன் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும்.
  15. மது எந்த விதத்திலும் உடலுக்கு நல்லதல்ல. முற்றிலும் பாதிப்பு கொண்டிருக்கும் மதுவை உடனே கைவிடுவது நல்லது.

மேலும் படிக்க: மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத உணவுகள் இங்கே

உடல் எடையை குறைக்க உங்கள் உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது வாழ்க்கை மிக முக்கியமாகும். உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல் உங்கள் ஆரோக்கியமும் உங்கள் கையில் தான். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

image source: freepik

Read Next

Weight Loss Diet: உங்க தொப்பையை குறைக்கனுமா? அப்போ இவற்றை செய்யுங்க!!

Disclaimer

குறிச்சொற்கள்