How to reduce belly fat by sitting: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதிலும்நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறையானது தொப்பைக் கொழுப்பு அதிகரிப்பு உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொப்பைக் கொழுப்பைக் குறைப்பது மிகவும் தந்திரமானதாகும். சரியான முறைகளைக் கடைபிடிக்காவிட்டால், இடுப்பைக் குறைக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெறாமல் போகலாம்.
நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருப்பதே தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான ஒரு ஆபத்து காரணியாக விளங்குகிறது. ஆனால், உட்கார்ந்திருக்கும் போது சில கவனமான அசைவுகளைச் செய்வதன் மூலம் செயலற்ற வாழ்க்கை முறையினால் ஏற்படக்கூடிய சில தீய விளைவுகளை மாற்றியமைக்கலாம். பொதுவாக உடலில் பல்வேறு இடங்களில் தேங்கிய அனைத்து வகையான கொழுப்புகளிலும், தொப்பைக் கொழுப்பு மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இது உள் உறுப்புகளைச் சுற்றிக் கொண்டிருப்பதால் இதன் செயல்பாடு கடினமாகிறது. எனவே இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Japanese Weight Loss: "ஹரா ஹச்சி பு" என்ற ஜப்பானிய மந்திரம் தெரியுமா? தொப்பை, உடல் எடை காணாமல் போகும்!
உட்கார்ந்திருக்கும் போது தொப்பைக் கொழுப்பைக் குறைப்பதற்கான வழிகள்
தொப்பை கொழுப்பை குறைப்பது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதே சமயம், நம்மை அதிக உற்பத்தித் திறனுடன் வைத்திருக்கவும் வழிவகுக்கிறது. இதில் உட்கார்ந்திருக்கும் போது தொப்பை கொழுப்பை அகற்றுவதற்கான வழிகளைக் காணலாம்.
நேராக அமர்ந்திருப்பது
உடல் தோரணை உடற்பயிற்சி நிலைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் உடல் தோரணையை சரிசெய்வது எடையைக் குறைப்பதற்கான முதல் படியாக அமைகிறது. எனவே சாய்வதைத் தவிர்த்து, நேராக உட்கார வேண்டும். ஏனெனில் இது தோரணையை சரிசெய்வது மட்டுமல்லாமல் எடையிழப்புக்கும் உதவுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நிமிர்ந்து உட்காருவதன் மூலம் ஒரு நாளைக்கு கூடுதலாக 350 கலோரிகளை எரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது நாள் முழுவதும் சரியான தோரணையை பராமரிப்பதன் மூலம் தட்டையான மற்றும் இறுக்கமான வயிற்றைப் பெறலாம்.
சிட்டிங் க்ரஞ்சஸ்
நாற்காலியில் வசதியாக அமர்ந்திக்கும் போது உடல் எடையைக் குறைக்க முடியும். அதன் படி, தொப்பையைக் குறைக்க உதவும் எளிதான பயிற்சிகளில் ஒன்றாக க்ரஞ்சஸ் அமைகிறது. இந்த பயிற்சியில் நாற்காலியின் விளிம்பில் கைகளை தலைக்கு பின்னால் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் விரல்களை ஒன்றோடொன்று இணைத்து, முதுகை நேராக்க வேண்டும்.
பின் சற்று பின்னால் சாய்ந்து கொள்ள வேண்டும். மார்பை முழங்கால்களை நோக்கி உயர்த்த வேண்டும். இவ்வாறு முன்னோக்கி குனியும் போது வயிற்று தசைகளை ஈடுபடுத்துகிறது. இதன் போது, மூச்சை இழுத்து, தொடக்க நிலைக்குத் திரும்பும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த இயக்கம் முழுவதும் மையத்தை ஈடுபாட்டுடன் வைத்திருக்க வேண்டும். இதில் 3 செட்களுக்கு 15 முறை மீண்டும் செய்வது இந்தப் பயிற்சி செய்வது நல்லது.
பட்டாம்பூச்சி போஸ்
பத்தா கோனாசனா என்றழைக்கப்படும் பட்டாம்பூச்சி போஸ் வசதியான போஸில் உட்கார்ந்து தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவக்கூடிய ஒரு அற்புதமான பயிற்சியாகும். இது தொப்பை கொழுப்பு இழப்பைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது. இது வயிற்று கொழுப்புக்கான ஆபத்து காரணியாகும்.
இந்நிலையில், வசதியாக உட்கார்ந்து, கால்களை நீட்டி பிறகு முழங்கால்களை வளைத்து, கால்களை இடுப்பை நோக்கி கொண்டு வர வேண்டும். பிறகு உள்ளங்காலை ஒன்றாக அழுத்த வேண்டும். அவற்றைக் கைகளால் பிடித்துக் கொள்ளலாம். பட்டாம்பூச்சி இறக்கைகளின் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் முழங்கால்களை மெதுவாக மேலும் கீழும் நகர்த்த வேண்டும். முதுகை நேராக வைத்து, இந்த மென்மையான இடுப்பு நீட்சியை அனுபவிக்க நிமிர்ந்த தோரணையில் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாகக் குறைக்க தினமும் தூங்கும் முன் நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்
ஆழ்ந்த சுவாசம்
தொப்பைக் கொழுப்பிற்கான மிகப்பெரிய ஆபத்து காரணிகளில் ஒன்று மன அழுத்தம் அமைகிறது. ஆய்வின் படி, அதிக கார்டிசோல் அளவுகள் அதிகரித்த மன அழுத்த அளவுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிராணாயாமா அல்லது சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தொப்பைக் கொழுப்பைக் குறைக்கலாம். இது நீண்ட கால ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதை நீக்குகிறது.
தண்ணீர் அருந்துவது
உடல் எடையிழப்புக்கு தண்ணீர் அருந்துவது சிறந்த தேர்வாகும். ஏனெனில் நீரிழப்பு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது மலச்சிக்கல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. உட்கார்ந்திருக்கும் போது தண்ணீர் குடிப்பது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த கொழுப்பு மூலக்கூறுகள் உடைவதற்கு தண்ணீர் முக்கியமாகும். சரியான நீரேற்றத்தின் மூலம் கொழுப்பைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலில் தேங்கிய கெட்ட கொழுப்பைக் கரைக்க தினமும் நீங்க செய்ய வேண்டிய சிம்பிள் எக்சர்சைஸ்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version