Japanese Weight Loss: எடை இழக்க பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றில் ஒருமுறை தான் "ஹரா ஹச்சி பு" இது ஜப்பானிய எடை இழப்பு முறையாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் மக்களிடையே உடல் பருமன் குறைவாகவே காணப்படுகிறது. அதற்கு இந்த வகை முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.
உடல் பருமன் காரணமாக, உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், ஜப்பானிய மக்களின் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஒரு முறையின்படி, உடல் பருமன் மற்றும் பிற நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில், உடல் பருமன் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக மாறி வருகிறது.
மேலும் படிக்க: Angry Side Effects: கோபம் ஏன் வருகிறது? கோபப்படுவதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?
எடையை கட்டுப்படுத்த ஜப்பான் வழிமுறைகள் தெரியுமா?
ஜப்பானிய மக்களின் எடை இழப்புக்கான முக்கிய ரகசியம் என்று பார்த்தால் அது "கவனத்துடன் சாப்பிடுதல்" என்பதே ஆகும். 80% வயிறு நிறையும் வரை மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயமாகும். கனத்தோடு உணவு உண்பது மற்றும் பகுதி நேர கட்டுப்பாடு என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.
ஹரா ஹச்சி பூ என்றால் என்ன?
- ஹரா ஹச்சி பு என்பது எடை இழப்புக்கான ஒரு ஜப்பானிய முறையாகும்.
- இந்த முறையில், கவனத்துடன் சாப்பிடுவது பற்றி விவாதிக்கப்படுகிறது.
- இதன்மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும், மேலும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
- ஹரா ஹச்சி பு விதியின்படி, உங்கள் வயிற்றை 80 சதவீதம் மட்டுமே நிரப்ப வேண்டும்.
- ஹரா ஹச்சி புவில் சிறிய பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்த வழியில் நீங்கள் குறைந்த உணவை உட்கொள்வீர்கள், மேலும் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
- ஹரா ஹச்சி புவின் கூற்றுப்படி, நீங்கள் உங்கள் பசிக்காக மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஹரா ஹச்சி பு விதிகளை பின்பற்றுவது எப்படி?
- நீங்கள் உண்ணும் உணவின் அளவிற்கு கவனம் செலுத்துங்கள். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எந்த அளவில் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
- ஹரா ஹச்சி பு விதியின்படி, அதிக அளவில் சாப்பிட வேண்டாம்.
- இந்த விதியின்படி, ஒருவர் சிறிய பாத்திரங்களில் உணவை உண்ண வேண்டும்.
- மேலும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

ஜப்பானிய மக்களின் எடை இழைப்பு ரகசியம்
சாப்பாட்டில் மிகுந்த கவனம் தேவை
ஜப்பானியர்களின் எடை இழப்புக்கான முக்கிய ரகசியங்களில் ஒன்று, அவர்களின் கவனமான உணவு மற்றும் பகுதி கட்டுப்பாடு ஆகும். தனது தட்டில் அதிகமாகக் குவித்து சாப்பிடுவதற்கு பதிலாக, பல்வேறு வகை உணவுகளை சிறிய பகுதிகளில் பரிமாறி சாப்பிடுகிறார்கள்.
இது அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது. ஜப்பானிய மக்கள் தங்கள் பசியில் 80 சதவீத அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க பெருமளவு உதவுகிறது.
சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு
ஜப்பானிய மக்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண முயற்சி செய்கிறார்கள். அவர்களின் உணவில் பொதுவாக மீன், காய்கறிகள், டோஃபு, அரிசி போன்றவை அடங்கும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. ஜப்பானியர்களும் தொடர்ந்து கிரீன் டீ குடிப்பார்கள். கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உடல் செயல்பாடு மிக முக்கியம்
ஜப்பானிய மக்கள் பல நாடுகளை விட சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர். ஜப்பானில் மக்கள் குறுகிய தூரத்தை கடக்க மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது தவிர, உடற்பயிற்சியை தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஆக்குகிறார்.
சூடான நீர் குளியல்
ஜப்பானிய மக்கள் சூடான குளியல் எடுக்க விரும்புகிறார்கள். சூடான குளியல் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
எடையைக் கட்டுப்படுத்த, ஒருவர் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை விரைவாக நீக்குகிறது. மேலும், நார்ச்சத்து உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இது உங்கள் உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலும் படிக்க: Vitamin B12 Foods: இந்த சைவ உணவுகள் வைட்டமின் பி12-ன் சிறந்த மூலமாகும்.!
உணவே மருந்து என்பதுதான் முக்கிய மந்திரம்
ஜப்பானிய முறை, ஆங்கிலேயே முறை எல்லாம் தவிர்த்து நம் பாரம்பரிய முறையை பின்பற்றினாலே போதும். உணவே மருந்து என்பதுதான் முக்கிய மந்திரமாகும். உணவே மருந்து என நினைத்து உணவை உட்கொண்டால் பல வழிகளில் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
image source: freepik