ஜப்பானியர்களின் பிரபலமான நீர் சிகிச்சை என்பது உடல் எடையை குறைக்க மட்டுமே பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த வெயிட் லாஸ் தெரபியை பின்பற்றுவதால் உங்களுக்கு என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரியுமா?
“நீர் இன்றி அமையாது உலகு” என்பது வள்ளுவரின் பொன்மொழிகள். பயிர் முதல் உயிர் வரை அனைத்தும் வாழ தண்ணீர் இன்றியாமையாதது. அப்படிப்பட்ட உயிர் காக்கும் திரவத்தைக் கொண்டு ஜப்பானியர்கள் வாட்டர் தெரபி என்ற ஒன்றிணை பின்பற்றுகின்றனர்.
முக்கிய கட்டுரைகள்

பொதுவாக இந்த நீர் சிகிச்சை உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
ஜப்பனீஸ் வாட்டர் தெரபி:
ஜப்பானிய நீர் சிகிச்சை என்பது காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதை குடிப்பதாகும். அத்துடன் உணவு இடைவேளையின் போது அவ்வப்போது குறிப்பிட்ட அளவு தண்ணீர் பருக வேண்டும். இது கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஜப்பனீஸ் நீர் சிகிச்சை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது நல்லது. இது உடல் கொழுப்பை கரைக்கக்கூடிய ஒரு செயலாகும். இது உடல் கொழுப்பு மற்றும் தொப்பையை கரைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், உடல் வெப்பநிலை உயர்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது மற்றும் அதிக ஆற்றலை அளிக்கிறது.
நீரேற்றம்:
வாட்டர் தெரபி மூலம் அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் உடல் ஈரப்பதம் பெறுகிறது. மூளையின் செயல்பாடு மேம்படும். இது பிபியைக் குறைக்க உதவுகிறது. சிறுநீரக கல், ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாகும். இது உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜப்பானிய நீர் சிகிச்சை சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
இதையும் படிங்க: Winter Diet: குளிர் காலத்தில் தினமும் நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
சரும பராமரிப்பு:
ஜப்பானிய நீர் சிகிச்சை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. ஜப்பானியர்களின் தோல் பளிச்சென்று சுருக்கமில்லாமல் இருக்க, நிறைய தண்ணீர் குடிப்பதும் காரணமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உங்கள் சருமம் வறண்டு போகும். மேலும் சருமத்தில் பருக்களை உண்டாக்குகிறது.
செரிமான பிரச்சனைக்கு தீர்வு:
ஜப்பானிய நீர் சிகிச்சை செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது மலச்சிக்கலை போக்குகிறது. காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது, குடல்களை சுத்தப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் நீக்கி, வயிற்றின் செரிமான அமைப்பு மேம்படுகிறது.
Image Source: Freepik