Ozempic For Weight Loss: உடல் எடை குறைய பலர் பல வழிகளை கையாளுகின்றனர். சிலருக்கு இந்த வழிகள் மூலம் பலன் கிடைக்கிறது, பலருக்கு இந்த வழிகள் மூலம் பலன் கிடைப்பதில்லை. ஏணையோர் உடல் எடை குறைக்கும் முயற்சியில் அது நடக்காமல் விரக்தி அடைகிறார்கள். அதேபோல் எதுவும் வேகமாக நடக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது, அதன் ஒரு பகுதியாக உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என ஊசிகள் எடுக்கத் தொடங்குகிறார்கள்.
இதில் ஒன்றுதான் ஒசெம்பிக் என்ற தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி குறித்து சமீபகாலமாக பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது, அதேபோல் செல்சியா ஹேண்ட்லர் மற்றும் டிரேசி மோர்கன் போன்ற பல ஹாலிவுட் நட்சத்திரங்களும் சில ஊடக நேர்காணல்களில் எடை இழப்புக்கு Ozempic உட்கொள்வது பற்றிப் பேசியுள்ளனர்.
மேலும் படிக்க: மோசமாகும் இளைஞர்கள் நிலை.. எனர்ஜியே இல்லாமல் மந்த நிலையில் 70% இளைஞர்கள்: ICMR
Ozempic எனப்படும் ஒசெம்பிக் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதா, ஏதும் பக்கவிளைவுகள் வருமா, உடல் எடை சரசரவென குறைய இதை எடுத்துக் கொள்வோமா என பல கேள்விகள் பலர் மனதில் எழுந்து வருகிறது, இதற்கான சரியான பதிலை பார்க்கலாம். இதுகுறித்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனை மேலாண்மைத் தலைவர் டாக்டர் ராஜேஷ் ஹர்ஷவர்தன் கூறிய தகவலை பார்க்கலாம்.
டென்மார்க்கின் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், ஓசெம்பிக் மற்றும் வெகோவி என்ற மருந்துகளை தயாரித்துள்ளது. ஓசெம்பிக் போன்ற ஊசி மருந்துகளுக்கான தேவையும் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஓசெம்பிக் என்பது செமக்ளூடைடைக் கொண்ட ஒரு மருந்து. செமக்ளூடைடு இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செயல்படும் குளுகோகன் எனப்படும் மற்றொரு ஹார்மோனைக் குறைக்கிறது. இது அடிப்படையில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமீபத்தில், இந்த மருந்து எடை இழப்புக்கு உட்கொள்ளப்படுகிறது.
எடை இழப்புக்கு Ozempic பயன்படுத்த வேண்டுமா?
ஓசெம்பிக் என்பது நீரிழிவு நோயாளிகளுக்காக முதலில் உருவாக்கப்பட்ட மருந்து என்றும், எடை இழப்புக்கு மட்டும் இதைப் பயன்படுத்துவது சரியல்ல என்றும் டாக்டர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறினார். பலர் இந்த மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து உட்கொள்கிறார்கள், ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை உட்கொள்வது நல்லதல்ல.
இந்த மருந்து உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீரிழிவு இல்லாத ஒருவர் ஓசெம்பிக் எடுத்துக் கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்று வலி, நீரிழப்பு, பித்தப்பை பிரச்சனைகள் போன்ற சில சாத்தியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரக பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒசெம்பிக் மருந்து உட்கொண்டால் நீண்டகால பக்க விளைவுகள் ஏதும் வருமா?
- ஓசெம்பிக் மருந்தை நீண்ட நேரம் உட்கொள்வது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான அமைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- செமக்ளூட்டைட்டின் பயன்பாடு சிறுநீரகங்களைப் பாதிக்கலாம், குறிப்பாக ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.
- செமக்ளூடைடை நீண்ட காலமாகப் பயன்படுத்துவதால் சிலருக்கு பித்தப்பைக் கற்கள் உருவாகலாம், இது பித்தப்பைப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- செமக்ளூட்டைடைப் பயன்படுத்துதல் கணையத்தின் அழற்சி சிக்கல்களின் ஆபத்து அதிகரிக்கக்கூடும், இது தீவிரமாக இருக்கலாம்.
எடை இழப்புக்கு ஊசி போடுவது நல்லதா?
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது நல்லதல்ல என்றுதான் கூற வேண்டும். சரியான உணவு முறை, சரியான வாழ்க்கை முறை, தினசரி உடற்பயிற்சி போன்றவையே உடல் எடை இழப்புக்கு முறையான வழியாக கருதப்படுகிறது. எதற்கும் அவசரநிலை என்பது தீர்வாகாது, மெதுவாகவும் முறையாகவும் குறைக்கப்படும் எடை நிலையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதே உண்மையாகும்.
ஒசெம்பிக் மருந்து குறித்த உண்மை நிலைபாடு
நோர்டிஸ்கின் ஓசெம்பிக் அல்லது வெகோவி போன்ற பிளாக்பஸ்டர் மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஊகங்கள் மட்டுமே இன்றளவும் இருக்கிறது. இவை மட்டுமல்ல, பல உடல் பருமன் எதிர்ப்பு மருந்துகள் இந்திய சந்தையில் நுழைந்துள்ளன எனக் கூறப்பட்டாலும், ஓசெம்பிக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
image source: Meta