Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Doctor Verified

இதய துடிப்பை இயற்கையாக மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் பரிந்துரை

அன்றாட வாழ்வில் சில எளிய நடவடிக்கைகளின் மூலம், எளிதாக இதயத் துடிப்பை மேம்படுத்தலாம். இதில் குறைந்த இதயத் துடிப்புக்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் அதை அதிகரிப்பதற்கான சில நடவடிக்கைகள் குறித்து காணலாம்.

அன்றாட வாழ்வில் மோசமான மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகாய்ச் சந்திக்கின்றனர். இதில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் பொதுவானதாகக் கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், இதய செயலிழப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படுவதால், ஒரு நபருக்கு உடனடி மரணம் ஏற்படலாம். இப்போதெல்லாம், இதய துடிப்பு குறைவதால் ஏற்படும் பிரச்சனையும் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது.

ஆனால், சரியான நேரத்தில் இதய துடிப்பு மேம்படவில்லை என்றால், அது மாரடைப்புக்கும் வழிவகுக்கக்கூடும். இதில் இதயத்துடிப்பை எவ்வாறு அதிகரிப்பது அல்லது ஒழுங்குபடுத்துவது என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கான்பூரில் உள்ள இருதயவியல் நிறுவனத்தின் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் அவதேஷ் சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதில் இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவஹன் மூலம் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Beat Faster: உங்கள் இதயம் சில நேரங்களில் வேகமாக துடிக்கிறதா?… இந்த தவறுகள் தான் காரணம்!

இதயம் மெதுவாக துடிப்பதற்கான காரணங்கள்

இதய துடிப்பு குறைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வயதானது இதய திசுக்களை சேதப்படுத்துவதால் இது ஒரு முக்கிய காரணமாகும். பிற காரணங்கள்

மாரடைப்பு போன்ற இதய நோயால் இதய திசுக்களுக்கு ஏற்படும் சேதம்

பிறவி இதய குறைபாடு

இதய திசுக்களின் வீக்கம்

உடலில் பொட்டாசியம் அல்லது கால்சியம் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் இல்லாதது.

  • எந்த அறுவை சிகிச்சையின் வரலாறும் 
  • தூங்கும்போது தூங்குவதில் சிரமம் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
  • தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக உடல் எடை

இதயத்தின் துடிப்பை அதிகரிப்பதற்கான வழிகள்

உடற்பயிற்சி செய்வது

வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஜாகிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் ஜிம்மில் சுவாசப் பயிற்சிகள், யோகா மற்றும் சில லேசான பயிற்சிகள் செய்வதும் நன்மை பயக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது

புகைபிடிப்பது மற்றும் மது அருந்துதல் போன்ற இரண்டுமே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இவை மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் இது நுரையீரலை சேதப்படுத்துகிறது. எனவே, அவற்றைத் தவிர்ப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மகிழ்ச்சியாக இருப்பது

பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாக அமைகின்றன. எனவே இந்த மன அழுத்த காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்!!

போதுமான அளவு மற்றும் நல்ல தூக்கம் பெறுவது

தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவது இதயத் துடிப்பு குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே தொடர்ந்து ட்டை விட்டால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, சீக்கிரமாகவே மருத்துவ சிகிச்சை பெற்று 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.

சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுவது

குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையும், அதிகப்படியான வறுத்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கூடுதலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். பச்சை இலை காய்கறிகள், பயறு வகைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இதய துடிப்பை சீராக்க உதவுவது மட்டுமல்லாமல், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Irregular Heartbeat: திடீரென இதயத்துடிப்பில் ஏற்ற இறக்கம் இருக்கா? யோசிக்காம இதை பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

மகிழ்ச்சியான இதய நோய்க்குறி பற்றி தெரியுமா? இதன் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்.. மருத்துவர் சொன்னது

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 21, 2025 18:47 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content