World health day: நல்ல ஆரோக்கியத்திற்காக நீங்கள் தினமும் செய்ய வேண்டிய எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ

Natural remedies for overall health: நம் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு அன்றாட வழக்கத்தில் சில ஆரோக்கியமான பழக்கங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நம் அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
World health day: நல்ல ஆரோக்கியத்திற்காக நீங்கள் தினமும் செய்ய வேண்டிய எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ

Simple home remedies for good health: ஒவ்வொருவரும் அவர்களது வாழ்க்கையில் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அனைவரும் பொதுவாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதை மறக்கின்றனர். அதில் ஒன்றாகவே, நம் உடல் ஆரோக்கியம் அமைகிறது. ஆம். உண்மையில், உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதில் யார் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். நம் அன்றாட வாழ்வில் எத்தனை வேலைகள் இருப்பினும், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உலக நலவாழ்வு தினம் (World Health Day 2025)

இதற்காகவே உலக நலவாழ்வு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் உலக சுகாதார அமைப்பின் மூலம் அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும், 1950 ஆம் ஆண்டு முதல் உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

உலக சுகாதார தினத்தின் முக்கியத்துவம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சுகாதார தினம், உலக சுகாதார அமைப்பால் சர்வதேச சுகாதார விழிப்புணர்வு தினமாகக் கருதப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும், இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கவலை அளிக்கும் சில சுகாதார தலைப்புகளுக்கு கவனத்தை ஈர்க்க முயற்சி எடுக்கிறது. இந்த தினத்தில் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தை அடையவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் வழிகளைத் தெரிந்து கொள்வதை அவசியமாக்குகிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் உதவும் சில ஆரோக்கியமான எளிய வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 

நல்ல ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டிய சில எளிய வீட்டு வைத்தியங்கள்

நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் அவசியமாகும். இதற்கு அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் சரியான தூக்கம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் உள்ளது. எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்களும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும். அவற்றைப் பற்றி காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு மஞ்சள் பயன்படுத்துவது

மஞ்சள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த மற்றும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், செரிமானத்திற்கு உதவவும் உதவுகிறது. அன்றாட உணவில் மஞ்சளைச் சேர்ப்பது அல்லது மஞ்சள் தேநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

வயிறு ஆரோக்கியத்திற்கு வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் அருந்துவது

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நீரேற்றம் செய்யவும் எளிதான மற்றும் பயனுள்ள தேர்வாக அமைகிறது. எலுமிச்சையில் நல்ல அளவிலான வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானதாகும். இந்த பானம் அருந்துவது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ஆய்வு ஒன்றில், வெதுவெதுப்பான எலுமிச்சைச் சாறு அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி, சிலருக்கு மலச்சிக்கலைப் போக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி செய்ய சோம்பேறித் தனமா இருக்கா? இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க

மூளை செயல்பாட்டிற்கு நட்ஸ் சாப்பிடுவது

பாதாம், வால்நட்ஸ் மற்றும் முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவிலான நட்ஸ் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், எடை மேலாண்மைக்கும் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

குமட்டலுக்கு இஞ்சி சாப்பிடுவது

இஞ்சி இயற்கையாகவே அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இஞ்சியை உட்கொள்வது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆய்வு ஒன்றில், கீல்வாதம், மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் பிற நிலைமைகளுடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் இஞ்சி உதவுகிறது. இது குமட்டலைக் குறைக்கவும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் இஞ்சியை சேர்ப்பது, இஞ்சி டீ குடிப்பது போன்றவற்றின் மூலம் இது போன்ற நன்மைகளைப் பெறலாம்.

மன அழுத்தத்தைக் குறைக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வது

பொதுவாக ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் செய்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும், நுரையீரல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், ஐந்து நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைப் பயிற்சி செய்வது மன அழுத்த அளவைக் கணிசமாகக் குறைத்து மனநிலையை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அமைதியான இடத்தில், படுத்தோ அல்லது உட்கார்ந்தோ ஆழ்ந்த மூச்சை, உள்ளிழுத்து வெளிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சியை தினந்தோறும் சில நிமிடங்கள் செய்யலாம். மேலும் இது மன அழுத்த அளவைக் குறைத்து அமைதியான உணர்வை ஊக்குவிக்க உதவுகிறது.

இந்த எளிய வீட்டு வைத்தியங்களை தினசரி வழக்கங்களில் எளிதாக இணைப்பதன் மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: World Health Day 2025: இந்த தவறான மாலை வழக்கம்.. வெயிட்டு போட காரணமாக இருக்கலாம்.. உடனே மாத்துங்க..

Image Source: Freepik

Read Next

உங்க உடலில் இந்த மாற்றங்கள் எல்லாம் தோன்றுதா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்

Disclaimer

குறிச்சொற்கள்