Why do i struggle to exercise in the morning: அன்றாட வாழ்க்கையில் வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பழக்கம் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால், இதை வழக்கமாக கடைபிடிப்பது என்பது பலருக்கும் சிரமமான ஒன்றாக அமைகிறது. வாரத்திற்கு ஒரு முறை, இரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை இரு முறை என உடற்பயிற்சியை அவ்வப்போது செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது. உந்துதல் இல்லாமை, நேரக் கட்டுப்பாடுகள் அல்லது உடல் அசௌகரியம் என எதுவாக இருந்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான உந்துதலைக் கண்டறிவது சவாலானதாக அமைகிறது.
உலகளவில் நான்கு பெரியவர்களில் ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பில் கூறப்படுகிறது. முதலில் உடற்பயிற்சி செய்யும் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதும் பயனுள்ள உத்திகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும். இதன் மூலம் தடைகளைக் கடக்க உதவுகிறது. மேலும், உடற்பயிற்சியை அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதியாக மாற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Best Time to Workout: உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது? பகல் அல்லது இரவு! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..
உடற்பயிற்சி செய்ய சிரமப்படுவதற்கான காரணங்கள்
உடற்பயிற்சி செய்ய சிரமப்படுவதற்கு அல்லது சீரற்ற தன்மைக்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
குறிக்கோள் இல்லாமை
தெளிவான குறிக்கோள்கள் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது அதைச் செய்வதற்கான ஆர்வத்தை இழக்க வழிவகுக்குகிறது. ஆரம்ப உற்சாகம் பெரும்பாலும் காணக்கூடிய பலன்கள் இல்லாமல் அப்படியே குறைந்து விடும். குறிக்கோளுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது உடற்பயிற்சி செய்வதைத் தூண்டுவதுடன் குறிக்கோளை அடைய வழிவகுக்கும்.
நேரமின்மை
இன்றைய காலத்தில் நீண்ட வேலை நேரங்கள் மற்றும் பரபரப்பான அட்டவணைகள் பெரும்பாலும் உடற்பயிற்சிக்குக் குறைந்த நேரத்தையே செலவிட வைக்கிறது. மேலும், ஒரு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்க நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது உண்மையல்ல.
தன்னம்பிக்கை இல்லாமை
ஜிம் அல்லது உடற்பயிற்சி வகுப்புகளில் தன்னம்பிக்கை இல்லாததால், தொடக்கநிலையாளர்கள் ஊக்கப்படுத்தப்படுவதில்லை. இதனால், பலர் தங்கள் உடல் வடிவம் அல்லது உடற்பயிற்சி நிலை குறித்து சுயநினைவுடன் உணர்கிறார்கள்.
வலி அல்லது உடல் அசௌகரியம்
உடல் வலி, மூட்டு வலி, முதுகுவலி அல்லது முந்தைய காயங்கள் போன்ற பல்வேறு நிலைமைகளும் உடற்பயிற்சியை கடினமாக்குகிறது. மேலும், நெகிழ்வுத்தன்மை அல்லது விறைப்பு இல்லாமை மக்கள் அதிகமாக நகருவதைத் தடுக்கிறது.
விரைவில் முடிவைப் பெற நினைப்பது
மக்கள் உடற்பயிற்சி செய்த உடனேயே விரைவான முடிவுகளை எதிர்பார்க்கின்றனர். இதனால், மாற்றங்களைக் காணாதபோது விரக்தியடைகிறார்கள். இது அவர்களை உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தைக் குறைக்கிறது. பொதுவாக, எடை இழப்பு, தசை வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை மேம்பாடு போன்றவற்றிற்கு அதிக நேரம் எடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS ஆல் எடை குறைப்பதில் சிரமமா? இதோ நிபுணர் சொன்ன வெயிட்லாஸ் சீக்ரெட்
உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதற்கான குறிப்புகள்
இது போன்ற பல்வேறு சவால்கள் இருப்பினும், உடற்பயிற்சியை ஒரு நிலையான மற்றும் மகிழ்ச்சிகரமான பழக்கமாக மாற்ற சில வழிகள் உள்ளது.
சிறியதாக தொடங்குவது
உலக சுகாதார நிறுவனம் (WHO) வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வதை பரிந்துரைக்கிறது. இதை சிறிய அமர்வுகளாகப் பிரித்துச் செய்யலாம். அதன் படி, தினமும் 10 நிமிட நடைப்பயிற்சி கூட ஒரு சிறந்த ஆரம்பமாக அறியப்படுகிறது.
இலக்குகளை அமைப்பது
பெரிய அளவிலான எடையிழப்பை இலக்காகக் கொள்வதற்கு மாற்றாக, தினமும் 5,000 அடிகள் நடப்பது போன்ற குறுகிய கால இலக்குகளை அமைத்துக் கொள்ளலாம். இதற்கு உடற்பயிற்சி செயலி மூலம் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது உந்துதலைப் பராமரிக்க உதவுகிறது.
விரும்பும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பது
உடற்பயிற்சி என்றால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டும் என்பது அர்த்தமல்ல. நடனம், நடைபயணம், நீச்சல் அல்லது விளையாட்டு விளையாடுவது போன்றவற்றை முயற்சிக்கலாம். இந்த செயல்பாடுகள் உடற்பயிற்சி செய்வதை உற்சாகமாக மற்றும் ஈடுபாடாக வைத்திருக்க உதவுகிறது.
ஆற்றலில் கவனம் செலுத்துவது
உடற்பயிற்சி செய்வது மனத் தெளிவு, மனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கிறது. இது சிறந்த தூக்கம், குறைந்த மன அழுத்தம் மற்றும் மேம்பட்ட வலிமை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. எனவே எடையிழப்பில் கவனம் செலுத்தாமல், ஆற்றல் மட்டங்களை உயர்த்துவதில் கவனம் செலுத்தலாம்.
பழக்கமாக மாற்றிக் கொள்வது
உடற்பயிற்சி செய்வதில் நிலைத்தன்மை மிகவும் முக்கியமாகும். எனவே நினைவூட்டல்களை அமைத்து, சரியான பாதையில் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற எளிய பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Weight loss healthy habits: வெயிட் லாஸ் செய்ய டயட் மட்டுமல்ல இந்த பழக்க வழக்கங்களையும் பின்பற்றனும்
Image Source: Freepik