Doctor Verified

மகிழ்ச்சியான இதய நோய்க்குறி பற்றி தெரியுமா? இதன் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்.. மருத்துவர் சொன்னது

மகிழ்ச்சியான இதய நோய்க்குறி என்பது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய நோயாகும். இதில் மகிழ்ச்சியான இதய நோய்க்குறிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மகிழ்ச்சியான இதய நோய்க்குறி பற்றி தெரியுமா? இதன் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்.. மருத்துவர் சொன்னது


Happy Heart Syndrome Causes, symptoms, and prevention explained: அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. அவ்வாறே, மனவேதனை அல்லது அதிகப்படியான துக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இது உடைந்த இதய நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான மகிழ்ச்சி காரணமாக இதயத்திற்கும் தீங்கு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மகிழ்ச்சியான இதய நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது.

இதில் ஒரு நபர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக மாறும் ஒரு நிலையின் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த நிலையானது டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo Cardiomyopathy) என்று அழைக்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான இதய நோய்க்குறிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதைத் தடுக்கும் முறைகள் குறித்து, ஆர்ட்டெமிஸ் மருத்துவமனைகளின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, இருதயநோய் நிபுணர் டாக்டர் அமித் குமார் சௌராசி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

மகிழ்ச்சியான இதய நோய்க்குறி என்றால் என்ன? (Happy Heart Syndrome)

ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோம் அல்லது டகோட்சுபோ கார்டியோமயோபதி என்பது திடீர் மகிழ்ச்சியின் காரணமாக இதயத்தில் தற்காலிக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலையாகும். அதாவது இதயத்தின் கீழ் இடது பக்க சுவர் அசாதாரணமாக வீங்கி, இதயத்தின் பம்ப் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். ஒருவர் அதிகபட்ச மகிழ்ச்சியடையும் போது அதாவது திடீர் மகிழ்ச்சி இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இதய செயலிழப்புக்கு வழிவகுக்குகிறது. இது மூளையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி மாரடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இதய ஆரோக்கியம் முதல் ஹார்மோன் சமநிலை வரை.. பெண்களுக்கு மீன் எண்ணெய் தரும் அற்புதங்கள்

எனினும், மகிழ்ச்சியான இதய நோய்க்குறி மற்றும் மாரடைப்பு ஒரே மாதிரியானவை அல்ல. ஆனால், இந்த இரண்டின் சில அறிகுறிகள் ஒத்திருக்கலாம். மாரடைப்பு பொதுவாக தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம், மகிழ்ச்சியான இதய நோய்க்குறியில் அடைப்பு இல்லை. ஆனால், இதய தசைகள் சிறிது நேரம் பலவீனமடைகிறது. உண்மையில், மகிழ்ச்சியான இதய நோய்க்குறி அதிகப்படியான மகிழ்ச்சி, மன அழுத்தம் அல்லது பிற உணர்ச்சிகளால் ஏற்படுகிறது.

ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோமின் அறிகுறிகள்

ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோம் சில மாரடைப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. அதாவது மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை அமைகிறது.

  • சுவாசிப்பதில் சிரமம்
  • திடீரென கடுமையான மார்பு வலி
  • சிலருக்கு கழுத்து, தொண்டை அல்லது மேல் முதுகில் வலி ஏற்படுவது
  • வியர்வை அல்லது மூச்சுத் திணறல்
  • பதட்டமாக அல்லது பதட்டமாக உணர்வது
  • சிலருக்கு தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படுவது

ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • திடீரென்று மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவது
  • உயர் இரத்த அழுத்தம்
  • முன்பே இருக்கும் இதய நோய் இருப்பது
  • பதட்டம் அல்லது பீதி கோளாறு இருப்பது
  • ஹார்மோன் மாற்றங்கள் (மாதவிடாய் நிறுத்தம் போன்றவை)
  • ஏதேனும் மன அழுத்தம் நிறைந்தது
  • கடுமையான காயம் ஏற்படுவது

இந்த பதிவும் உதவலாம்: இதய பிரச்சனையை ரிவர்ஸ் செய்யணுமா? உங்க டயட்ல இந்த மாற்றங்களை மட்டும் கொண்டு வாருங்க

மகிழ்ச்சியான இதய நோய்க்குறியை தடுப்பது எப்படி?

இந்த ஹேப்பி ஹார்ட் சிண்ட்ரோம் மிகவும் அரிதானதாகும். பொதுவாக இது உயிருக்கு ஆபத்தானது அல்ல. எனினும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.

தொடர்ந்து பரிசோதனைகளை செய்து கொள்வது

இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலோ, அவ்வப்போது உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உணர்ச்சி சமநிலையைப் பேணுவது

மன அழுத்த சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், மிகுந்த மகிழ்ச்சி அல்லது சோகம் உள்ள எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவர் தன்னை நிலையாக வைத்திருக்க வேண்டும்.

மருத்துவரை அணுகுவது

அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கும்போது மார்பு வலி அல்லது பதட்டத்தை அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி

அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

முடிவுரை

மன அழுத்தம் அல்லது துக்கம் மட்டுமே மரணத்திற்கான ஆபத்து காரணியாக இருக்காது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது கூட, உங்கள் இதயம் பாதிக்கப்படலாம். அதிகப்படியான மகிழ்ச்சி நல்லது. ஆனால், இந்த மகிழ்ச்சியை கையாள முடியாவிட்டால், அது இதயத்திற்கு ஆபத்தானதாக மாறலாம். அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, இரண்டும் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, நமது உணர்ச்சி ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொண்டு அவற்றை நிலையாக வைத்திருக்க முயற்சி செய்வது அவசியமாகும். நிலைத்தன்மையுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதன் மூலம் இதய பாதிப்பைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருவதை எப்படி தெரிந்து கொள்வது? இதோ நீங்க புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

மோசமான குடல் ஆரோக்கியம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா? மருத்துவர் தரும் பதில்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version