இதய பிரச்சனையை ரிவர்ஸ் செய்யணுமா? உங்க டயட்ல இந்த மாற்றங்களை மட்டும் கொண்டு வாருங்க

Best diet for heart disease reversal: சில உணவுகளின் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதய நோய்களை ரிவர்ஸ் செய்ய சில உணவுமுறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் இதய பிரச்சனையை ரிவர்ஸ் செய்ய உதவும் உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இதய பிரச்சனையை ரிவர்ஸ் செய்யணுமா? உங்க டயட்ல இந்த மாற்றங்களை மட்டும் கொண்டு வாருங்க


How to cure heart disease with diet: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகள் எழலாம். குறிப்பாக, இதய நோய் இன்று பலரையும் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. உலகெங்கிலும் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய் அமைகிறது. இதற்கு முக்கிய மற்றும் முதன்மையான காரணமாக அமைவது சீரற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உணவு வகையாகும்.

எனினும் நல்ல செய்தி என்னவெனில், ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இதை மாற்றியமைக்கலாம். இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்துவது எப்போதும் சாத்தியமில்லை என்றாலும், விரிவான வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் ஆபத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு மற்றும் அதன் விளைவுகளில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இது குறித்து The Exam Room LIVE நிகழ்ச்சியில் இணைந்து, "The Weight Loss Champion" Chuck Carroll உடன் இதய நோயைத் தடுக்கவும் மேம்படுத்தவும் என்ன சாப்பிடலாம் என்பதை டாக்டர் நீல் பர்னார்ட் அவர்கள் சில தகவல்கலைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நட்ஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு உதவுமா? என்னென்ன நட்ஸ் சாப்பிடலாம்?

இதய நோயை ரிவர்ஸ் செய்ய உதவும் உணவுகள்

தாவர அடிப்படையிலான உணவுகள்

அன்றாட உணவில் நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நல்ல கொழுப்புகளை வழங்குகிறது. மேலும் மத்திய தரைக்கடல் உணவு போன்ற பெரும்பாலும் தாவரங்களால் ஆன உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களைத் தேர்ந்தெடுப்பது

ஓட்ஸ், பிரவுன் ரைஸ், குயினோவா மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற முழு தானியங்களில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது கொழுப்பைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் வெள்ளை ரொட்டி மற்றும் சர்க்கரை தானியங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து இதயப் பிரச்சினைகளை அதிகப்படுத்துகிறது.

உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது

அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். மேலும் நீரிழிவு நோய் மற்றும் அதிக எடை இரண்டுமே இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எவ்வளவு சர்க்கரை மற்றும் உப்பு சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு உணவு லேபிள்களைப் படிக்கலாம். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே சமைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பை அதிகரித்து மாரடைப்பு ஏற்படுத்தும் இந்த 6 காலை உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்

நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளைக் குறைப்பது

சிவப்பு இறைச்சி, வெண்ணெய், சீஸ், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் வறுத்த உணவுகள் அனைத்துமே நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளில் அதிகமாக உள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கலாம். இதற்கு மாற்றாக, நட்ஸ், விதைகள், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதயத்திற்கு நல்லது செய்யும் சூப்பர்ஃபுட்களைச் சேர்ப்பது

இலைக் கீரைகள், பெர்ரி வகைகள், சால்மன் அல்லது சார்டின் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், கிரீன் டீ மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வகை உணவுகள் இதயத்தை நன்றாக வேலை செய்ய வைக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.

இதய ஆரோக்கியமான உணவு என்பது தாவர அடிப்படையிலான உணவுகளை எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உப்பு மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மற்றும் முழுமையான, இயற்கை உணவுகளில் கவனம் செலுத்தும் ஒன்றாகும். இவ்வாறு ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து மற்றும் கவனமாகப் பின்பற்றுவதன் மூலம் இதய நோயின் சில விளைவுகளைக் கட்டுப்படுத்தவும், தலைகீழாக மாற்றவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஜிம்முக்குப் புதுசா? ஹார்ட் அட்டேக் வராம இருக்க நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கிய குறிப்புகள்

Image Source: Freepik

Read Next

கொழுப்பை அதிகரித்து மாரடைப்பு ஏற்படுத்தும் இந்த 6 காலை உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்

Disclaimer