Best dietary changes to lower blood pressure: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனையும் அடங்குகிறது. உயர் இரத்த அழுத்தம் தொடக்கத்தில் சிறிய அளவாகத் தோன்றினாலும், காலப்போக்கில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படலாம். இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தலாம். இதன் காரணமாக சிறுநீரக நோய் அல்லது செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனினும், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் இந்த நோய்களைத் தவிர்க்க அன்றாட உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். இது இரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில், உணவுமுறை இரத்த அழுத்தத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உப்பு நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுமுறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை அடையவும் பராமரிக்கவும் உதவுகிறது. இதில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் சில பயனுள்ள உணவுமுறை மாற்றங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: மக்களே உஷார்! நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துமாம்!
இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் உணவுமுறை மாற்றங்கள்
காஃபின் வரம்பிடுவது
பெரும்பாலானோர் பாதிக்கப்படாவிட்டாலும், காஃபின் உட்கொள்ளலைக் கண்காணிப்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது சிலருக்கு தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயத்தை உண்டாக்கலாம். எனவே காஃபின் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. காஃபினுக்கு மாற்றாக, காஃபின் இல்லாத மூலிகை தேநீர்களை தேர்வு செய்யலாம். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
அதிகப்படியான சோடியத்தைத் தவிர்ப்பது
பொதுவாக உப்பு உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது திரவத் தேக்கத்தைக் குறைக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பெரும்பாலும் அதிகளவிலான சோடியம் அளவுகள் உள்ளது.
முழு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது
தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் குறைந்த அளவிலான கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும், இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
லேபிள்களை படிப்பது
பெரும்பாலான பேக் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் நிறைந்திருக்கும். ஏனெனில், இது கெட்டுப்போகாமல் இருப்பதற்கான இந்த பொருள்களைச் சேர்த்துக் கொள்வர். எனவே இவை இரத்த அழுத்தத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம். லேபிள்களைப் படித்து அதில் அதிகளவு உப்பு, சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உப்பு, சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை மட்டுமல்ல இரத்த அழுத்தத்தையும் கன்ட்ரோலில் வைக்க வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை
சமச்சீர் உணவைத் தேர்ந்தெடுப்பது
நன்கு சமச்சீரான, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அன்றாட உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள், மெலிந்த புரதங்கள், ஏராளமான நார்ச்சத்துக்கள் சமநிலைப்படுத்துவது வயிறு, நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உகந்த ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது
இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு கனிமமாக பொட்டாசியம் அமைகிறது. அதாவது பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகள் உடலில் சோடியம் அளவை சமப்படுத்த உதவுகிறது. அதன் படி ஆரஞ்சு, வாழைப்பழங்கள், கீரை, வெண்ணெய், பீன்ஸ் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பகுதி கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்வது
பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் எடை மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த உணவுமுறை மாற்றங்களை கையாள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure: ஹை BP-யை கட்டுப்படுத்த மாத்திரை மட்டும் போதாது... கட்டாயம் இந்த உணவுகளையும் சாப்பிடுங்க!
Image Source: Freepik