இது தெரிஞ்சா இனி நீங்க கடையில மஞ்சள் தூள் வாங்க மாட்டீங்க.. ஈஸியான வழியில் வீட்டிலேயே செய்யலாம்

How to make pure turmeric powder at home: வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருள்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை விட சற்று அதிக நன்மைகளையே கொண்டிருக்கும். இதில் வீட்டில் எளிமையான முறையில் மஞ்சள் தயார் செய்யும் முறைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இது தெரிஞ்சா இனி நீங்க கடையில மஞ்சள் தூள் வாங்க மாட்டீங்க.. ஈஸியான வழியில் வீட்டிலேயே செய்யலாம்


How to make turmeric powder at home: பொதுவாக, நம் அன்றாட உணவிற்குத் தேவையான பல்வேறு உணவுப்பொருள்களை நமக்குக் கடைகளில் வாங்குவது தான் பழக்கம். ஆனால் இவ்வாறு வாங்கக்கூடிய சில பொருள்களில் கலப்படம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அனைத்து சமையலிலும் பிரதானமாக இருக்கக்கூடிய மஞ்சள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகும். கூடுதலாக, இதில் ஆன்டி பயாடிக் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இந்நிலையில், மஞ்சள் தூளிலும் ’லெட் குரோமேட்’ ரசாயனம் கலக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியைத் தருவதாக அமைகிறது.

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து, மக்கள் அனைவரும் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில் கலப்படம் கலந்து வருவது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு சிறந்த தேர்வாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே மஞ்சள் தூளை அரைத்துக் கொள்ளலாம். இது எளிமையானதாக மட்டுமல்லாமல், பாதுகாப்பானதாகவும் அமைகிறது. இது குறித்து அஞ்சலி முகேர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பதிவில், வீட்டிலேயே எளிமையான முறையில் மஞ்சள் தூளை எப்படி தயார் செய்யலாம் என்பதை விளக்கியுள்ளார். மேலும் அவர் கலப்பட மஞ்சள் மற்றும் சுத்தமான மஞ்சள் தூளுக்கும் இடையேயான வித்தியாசத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க

வீட்டிலேயே தயாரிக்கப்படும் மஞ்சள் தூள்

அஞ்சலி முகேர்ஜி அவர்களின் கூற்றுப்படி, “வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பிரகாசமானது, சிறந்தது மற்றும் 100% உண்மையானதாகும். இந்த மஞ்சளைத் தயார் செய்வதற்கு சந்தையில் இருந்து பெறப்பட்ட பச்சை மஞ்சள் வேர்த்தண்டுக்கிழங்குகளை (நிலத்தடி தண்டுகள்) பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் வீட்டிலேயே மஞ்சள் தயாரிக்கும் முறை குறித்து பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் தூள் தயாரிக்கும் முறை

படி 1: பச்சையான மஞ்சள் வேர்த்தண்டுக்கிழங்குகளை 1-2 நாள்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும்

படி 2: பிறகு சிறிய துண்டுகளாக உடைக்கலாம்

படி 3: அதன் பின், இதை நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளலாம்

படி 4: அரைத்த பொடியை ஒன்று அல்லது இரண்டு முறை சல்லடை செய்து எடுத்துக் கொள்ளலாம்

இவ்வாறு தயாரிக்கும் மஞ்சள் தூளானது கூடுதல் நிறம் இல்லாத, இரசாயங்கள் சேர்க்காத, துடிப்பான மஞ்சளாகும்.

கடை மஞ்சள் தூளுக்கும், வீட்டில் செய்த மஞ்சள் தூளுக்கும் உள்ள வித்தியாசம்

அஞ்சலி முகர்ஜி அவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளுக்கும், வீட்டிலேயே தயார் செய்த மஞ்சள் தூளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric For Weight Loss: எடை இழப்புக்கு மஞ்சள் எப்படி வழிவகுக்கும்.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

பொதுவாக, கடையில் வாங்கப்படும் மஞ்சள் பெரும்பாலும் மந்தமாகவும் வெளிர் நிறமாகவும் காணப்படும். ஏனெனில், அது பெரிதும் பதப்படுத்தப்பட்டு பெரும்பாலும் கலப்படம் செய்யப்படுகிறது.

  • ஈய குரோமேட் (ஒரு நச்சு மஞ்சள் நிறமி!)
  • சுண்ணாம்புத் தூள்
  • ஸ்டார்ச் அல்லது மஞ்சள் சோப்ஸ்டோன்

இந்த கப்படங்கள் தூய்மையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கடுமையான நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சளானது இயற்கையாகவே பிரகாசமான, காரமான மற்றும் குர்குமின் கலவை நிறைந்ததாகும். மஞ்சள் அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளை வழங்கும் கலவையாகக் கருதப்படுகிறது.

குறிப்புகள்

  • மஞ்சளை சூரிய ஒளியில் காய வைக்கும் போது, கிழங்கு நன்றாக காய்வதோடு நீண்ட மாதங்களுக்கு கெடாமலும், அதே தன்மையுடனும் காணப்படுகிறது.
  • கடையில் இருந்து மஞ்சள் கிழங்குகளை வாங்கும் போது, அதில் பூஞ்சை இருக்கிறத என்பதை நன்கு ஆராய்ந்து, பார்த்து வாங்க வேண்டும்.
  • இயற்கையான மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் கிழங்குகள் பளீர் என மின்னாது. அப்படி இருந்தால், இவை கலப்படம் செய்யப்பட்டவையாக இருக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் உங்கள் கல்லீரலை எப்படி பாதுகாக்கும் தெரியுமா? நிபுணர்கள் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Summer Drinks: கோடையில் நீரேற்றமாக இருக்க என்ன குடிக்க வேண்டும்.? சிறந்த பானங்கள் இங்கே..

Disclaimer