புரோட்டீன் பவுடரை இனி கடையில வாங்க வேணாம்.. வீட்டிலேயே சிம்பிளான முறையில் செய்யலாம்

How to make protein powder at home in tamil: உடல் ஆரோக்கியத்திற்கு புரதச்சத்துக்கள் மிகவும் இன்றிமையாததாகும். இதை நம் அன்றாட உணவின் மூலம் பெறலாம். எனினும், சிலர் புரதச்சத்துக்களைப் பெற புரோட்டீன் பவுடரை பயன்படுத்துகின்றனர். இதில் வீட்டிலேயே எளிமையான முறையில் புரோட்டீன் பவுடர் தயாரிக்கும் முறை குறித்து மருத்துவர் கூறியுள்ளதை காண்போம்.
  • SHARE
  • FOLLOW
புரோட்டீன் பவுடரை இனி கடையில வாங்க வேணாம்.. வீட்டிலேயே சிம்பிளான முறையில் செய்யலாம்


Homemade protein powder recipe: மனித உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக புரதம் அமைகிறது. இது உடலின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இவை செல்கள் மற்றும் தசைகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, உடலின் பாகங்களும், முடி மற்றும் சருமத்திற்கும் கூட புரதம் தேவைப்படுகிறது. பொதுவாக, மக்கள் தங்களுக்குத் தேவையான புரதத்தை பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவற்றிலிருந்து பெறுகின்றனர். ஆனால் பலர் தசை வளர்ச்சிக்காக சந்தைகளில் கிடைக்கும் புரத பவுடரை வாங்கி உட்கொள்கின்றனர்.

குறிப்பாக, ஜிம்மிற்குச் செல்பவர்கள் தங்களது தசைகளை வளர்ப்பதற்காக சந்தையில் கிடைக்கும் புரதப் பொடியை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், இவ்வாறு கடைகளில் வாங்கி பயன்படுத்தக்கூடிய புரதப் பொடியானது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக அமைகிறது. இந்த சூழ்நிலையில், நம் வீட்டிலேயே எளிதாக புரதப் பொடியைத் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதில் வீட்டிலேயே புரதப் பொடியின் செய்முறை குறித்து ஆரோக்கிய உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து கிளினிக்கின் உணவியல் நிபுணர் டாக்டர் சுகிதா முத்ரேஜா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

புரோட்டீன் பவுடரை தயாரிப்பது எப்படி?

உலர் பழங்கள் மற்றும் விதைகள்

நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளைப் பயன்படுத்தி புரோட்டீன் பவுடரைத் தயார் செய்யலாம்.

தேவையானவை

  • பாதாம் - 1 கப்
  • முந்திரி மற்றும் பிஸ்தா - 1/4 கப்
  • வால்நட்ஸ் மற்றும் பச்சை வேர்க்கடலை - ½ கப்
  • பச்சையாக முலாம்பழம் விதைகள் - 2 தேக்கரண்டி
  • பச்சை பூசணி விதைகள் - 2 தேக்கரண்டி
  • சூரியகாந்தி விதைகள் - 2 தேக்கரண்டி
  • சியா விதைகள் - 2 தேக்கரண்டி
  • ஆளி விதைகள் - 1 தேக்கரண்டி
  • நறுக்கிய உலர்ந்த பேரீச்சம்பழம் - தோராயமாக 1/4 கப்

செய்முறை

  • இந்த புரத பவுடரைத் தயாரிக்க, முதலில் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி போன்றவற்றை ஒவ்வொன்றாக வறுத்துக் கொள்ளலாம்.
  • பிறகு சூரியகாந்தி, முலாம்பழம், பூசணிக்காய் மற்றும் ஆளி விதைகளைச் சேர்த்து வறுக்க வேண்டும்.
  • இவை அனைத்தும் ஆறிய பிறகு சியா விதைகள் மற்றும் உலர்ந்த பேரீச்சம்பழங்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இப்போது இவை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்றாகப் பொடி செய்து, அதை தினமும் சாப்பிடலாம்.

சோயாபீன்ஸ் மற்றும் சியா விதைகள்

தேவையானைவ

  • சோயாபீன்ஸ் - 3 கப்
  • சியா விதைகள் - அரை கப்
  • பாதாம் மற்றும் முந்திரி - 1/4 கப்

தயாரிக்கும் முறை

  • முதலில் சோயாபீனை மொறுமொறுப்பாக மாறும் வரை வறுத்து, அதன் பிறகு முந்திரி மற்றும் பாதாமை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, இவை அனைத்தையும் குளிர்விக்கலாம்.
  • பின்னர் சியா விதைகள் உட்பட அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த பவுடரை காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Milk Protein Powder Benefits: பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

ஓட்ஸ் மற்றும் பாதாம்

உடல் ஆரோக்கியத்திற்கு ஓட்ஸ் மற்றும் பாதாம் பருப்புகளைக் கலந்து புரோட்டீன் பவுடரைத் தயார் செய்யலாம். இவை இரண்டிலுமே ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலிருந்து தயாரிக்கக்கூடிய புரோட்டீன் பவுடரை சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன்கள் கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

தேவையானவை

  • ஓட்ஸ் - 2 கப்
  • பாதாம் - அரை கப்

செய்முறை

  • இந்த பவுடரைத் தயார் செய்ய, முதலில் பாதாம் பருப்பை மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது பாதாம் மற்றும் ஓட்ஸை ஒன்றாகக் கலந்து இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேன்டும்.
  • இந்த புரோட்டீன் பவுடரை காலை மற்றும் மாலை நேரத்தில் பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
  • இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், தசைகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம், வால்நட்ஸ் மற்றும் முந்திரி

தேவையானவை

  • பாதாம் - ஒரு கப்
  • வால்நட்ஸ் - அரை கப்
  • முந்திரி - அரை கப்

தயாரிக்கும் முறை

  • இந்த புரோட்டீன் பவுடர் தயாரிப்பதற்கு, முதலில் வால்நட்ஸ், பாதாம் மற்றும் முந்திரி போன்றவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • விரும்பினால், இவை மூன்றையும் ஒன்றாக வறுக்கலாம்.
  • எனினும், இதை அதிகமாக வறுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகம் வறுப்பதால் பொடி கசப்பாக மாறலாம்.
  • இந்த மூன்றையும் வறுத்த பிறகு, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது இந்த பொடியை ஜாடியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் பவுடரை சாப்பிடும் முறை

  • இந்த புரத பொடியை பாலுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • இதை ஸ்மூத்தி, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த புரோட்டீன் பவுடரை தினமும் உட்கொள்ளலாம்.
  • இந்த புரோட்டீன் பவுடரை மாவில் கலந்து ரொட்டி செய்தும் சாப்பிடலாம்.
  • உடல் ஆரோக்கியத்திற்கும், தீங்கு விளைவிக்கும் புரோட்டீன் பவுடரைத் தவிர்க்கவும் புரதப் பொடிகளை வீட்டிலேயே தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், இது முற்றிலும் தூய்மையானவை ஆகும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Protein Powder: உடல் எடை அதிகரிக்க புரோட்டீன் பவுடரை வீட்டிலேயே இப்படி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

கல்லீரல் ஹெல்த்தியா இருக்க இந்த மூன்று உணவுகளிலிருந்து நீங்க தள்ளி இருக்கணும்.. மருத்துவர் சொன்னது

Disclaimer